கேரட்,முள்ளங்கி,பட்டாணி ரைஸ்
தேவையானவை
கேரட் - துறுவியது 1/2 கப்
வெள்ளை முள்ளங்கி - துறுவியது 1/2 கப்
பட்டாணி - ஊறவைத்தது1/4கப்
வெங்காயம் - 1 நறுக்கியது
பச்சைமிளகாய் - 1 நீளமாக வெட்டியது
இன்ஞி பூண்டு பேஸ்ட் - 1/2 தே.க
வேகவைத்த உதிரி சாதம் - 2 கப்
உப்பு - தேவைகேற்ப்ப
லெமன் ஜுஸ் - 1/2 தே.க
கொத்தமல்லி இலை - கொஞ்சம்
மசாலா--------
பட்டை - 1 துண்டு
சோம்பு - 1/2 தே.க
கரம்மசாலா - 1/2 தே.க
செய்முறை
பச்சரிசி, பாஸ்மதி அரிசி எதுவானலும் வேகவைத்த
உதிரி சாதம்.கடாயில் நெய்+எண்ணெய் விட்டு சூடாகியதும்
பட்டை, சோம்பு,சேர்த்து வதங்கியதும், இஞ்ஞி பூண்டு பேஸ்ட்
வெட்டிய பச்சைமிளகாய்,வெங்காயம், சேர்த்து நன்றாக வதக்கவும்.
அதில் துறுவிய கேரட், துறுவிய முள்ளங்கி
பட்டானி சேர்த்து மேலும் பத்துநிமிடம் வேகவைக்கவும்.
இதில் கரம்மசாலா தூள், வேகவைத்த சாதம், உப்பு சேர்த்து நன்றாக கிளறவும்.
லெமன் சாறை சேர்த்து மேலும் ஒருமுறை நன்றாக கலந்து
கொத்தமல்லி இலை துவி பரிமாறவும்.
இதற்க்கு கேப்ஸிகம் ரைத்தா, பச்சடி, வெங்காய பச்சடி
ரைத்தா சேர்த்துசாப்பிட நன்றாக இருக்கும்.
ஹெல்த்தி க்ரின்+பைபர் சாதம்.
HAPPY REPUBLIC DAY
