Friday, November 30, 2012

கத்தரிக்காய் பிரட்டல்




கத்தரிக்காய்  பிரட்டல்

தேவையானவை

சின்ன கத்தரிக்காய் - 6
வெங்காயம்                  1
தக்காளி                          1


அரைக்க

துறுவிய தேங்காய்
சின்ன வெங்காயம்
பூண்டு
சோம்பு
கறிவேப்பிலை
 


தாளிக்க

எண்ணெய்              1/2 தே.க
கடுகு                          1/4 தே.க
பெருங்காயத்தூள் 1/4 தே.க
வெந்தயம்                 1/4 தே.க
கறிவேப்பிலை        கொஞ்சம்


செய்முறை

முதலில் அரைக்கவேண்டியதை அரைக்கவும்

ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு அதில் தாளிக்கயுள்ளதை தாளித்து பின் அரைத்த கலவையை விட்டு குறைந்த தீயில் வைத்து வதக்கவுக்ம், வதங்கியதும் வெட்டியுள்ள கத்தரிக்காயை  சேர்த்து நன்றாக கிளறி விட்டு அதில் மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், தனியா தூள், உப்பும் சேர்த்து மீண்டும் நன்றாக கிளறி மூடி போட்டு அடுப்பை சிம்மில் வைத்து 10 நிமிடம் வேகவைத்து எடுக்கவும்.

இது சாததிற்க்கு தொட்டு சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
நல்லெண்ய் சேர்த்து வதக்கினால மேலும் சுவை கூடும்.
சிலர் பூண்டு சேர்த்தும் செய்வார்கள்.
எளிதில் செய்யகூடிய பிரட்டல். கத்தரிக்காய் குழையாமல் வேகவைத்து எடுக்கவும்.

நான் மனோ சாமிநாதன் அவர்களின் கத்தரிக்காய் பிரட்டலை சின்ன மாற்றத்தோடு செய்தேன், மிகவும் ருசியாக இருந்தது.

நன்றி மனோ அவர்களுக்கு.



11 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

சின்ன மாற்றம்-இதையும் செய்து பார்க்கச் சொல்லுவோம்... நன்றி...

Aruna Manikandan said...

looks delicious and very tempting :)

கதம்ப உணர்வுகள் said...

ஆஹா வாசிக்கும்போதே சாப்பிடவேண்டும் போலிருக்கிறதே விஜி....

படமும் அழகு.... மாற்றி செய்து பார்த்ததும் சிறப்பு... மாத்தி யோசித்ததன் பலன் இதோ சுவையுள்ள ஒரு டிஷ் எங்களுக்கும் சுவைக்க கிடைத்ததே....

என்னவருக்கு கத்திரிக்காய் மிக விருப்பம்... இனி இதுபோல் செய்து நைசா நல்லப்பேரு வாங்கிர வேண்டியது தான் விஜியின் உபயத்தால்....

கதம்ப உணர்வுகள் தளத்தில் வந்து நீங்க போட்ட கருத்தை இல்லை இல்லை உங்க அன்பு பரிமாற்றத்தை பார்த்து வியந்தேன்...

வை.கோ அண்ணாவுக்கு தான் நன்றி சொல்லவேண்டும்....

இப்படி ஒரு அருமையான அன்பு மனதை எனக்கு தோழமையாக்கியதற்கு...

அன்பு நன்றிகள் விஜி கத்திரிக்காய் பிரட்டலுக்கும் அன்பு பரிமாற்றத்துக்கும் தளத்தில் வந்து கருத்து இட்டதற்கும்...

ஸ்டாப் மஞ்சு ப்ளீஸ் ஸ்டாப்....

ஓகேப்பா விஜி ஸ்டாப்பிட்டேன்... :)

வை.கோபாலகிருஷ்ணன் said...

நான் ஏதேதோ சொல்ல வந்தேன்.

என் அன்புத்தங்கச்சி மஞ்சு ஏதேதோ மேலே சொல்லியதைப் படித்தேனா .. அதையே மீண்டும் மீண்டும் படித்து ரசித்துக்கொண்டிருந்தேனா ... போச்சு ... போச்சு .... நான் சொல்ல வந்ததே எனக்கு மறந்தே போச்சு.

NON STOP ஆக எழுதிக்கிட்டே போவாங்க. படிக்க மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும். இன்று ஏனோ குட்டியூண்டா எழுதிட்டு ஸ்டாப்பிட்டாங்க.

உங்க மேலே பழியைப்போட்டுட்டுத் தப்பிச்சுட்டாங்க, பாருங்க... மஞ்சுவை விடாதீங்க மேடம்.

மஞ்சுவின் பின்னூட்டங்களைப் படிக்க மட்டுமே நான் பல பதிவுகளுக்குப் போவதுண்டு. பதிவை விட மஞ்சுவின் பின்னூட்டங்களில் ஏராளமான தகவல்கள் தாராளமாகக் கிடைக்கும்.

கத்திரிக்காய்ப் பதிவுக்குப் பாராட்டுக்கள், நன்றிகள்.

Vijiskitchencreations said...

வாங்க தன்பாலன. அவசியம் செய்து பாருங்க.நன்றி.

Vijiskitchencreations said...

அருணா. வாங்க நல்ல டேஸ்டியா இருக்கும்.நன்றி.

Vijiskitchencreations said...

வாங்க மஞ்சு அக்கா. மிக சந்தோஷமா இருக்கு. உங்க கமெண்ட்ஸை படிக்க படிக்க எனக்கு ஒரே சந்தோஷம். அவசியம் செய்து பாருங்க. உங்க வலைதளம் மிக அருமை. நல்ல பதிவுகள்.
மீண்டும் வருகிறேன். நல்ல ஒரு கதம்பமா ஜொலிக்கிறது. நன்றி மீண்டும் உங்க அன்பான அனபை பெற்றதற்க்கு நான் முதலில் நன்றி சொல்லி கொள்கிறேன். அடுத்து என் வலைபதிவை தொடரறதை நினைத்து எனக்கு ரொம்ப சந்தோஷம்.நன்றி.

Vijiskitchencreations said...

வாங்கோ வை.கோ ஸார். உண்மையா சொன்னிங்க மஞ்சு அவர்காளின் அன்பு வார்த்தகளில் நான் மயங்கிவிட்டேன்.அவ்வளவு நல்ல கமெண்ட்ஸை எழுதி தள்ளிட்டாங்க. நான் அவங்களை அவ்ளவு சீக்கிரம் விடமாட்டேன். மீண்டும் மீண்டும் அவர்களின் நட்புகளோடு நானும் அவங்களை பின் தொடர்கிறேன். நன்றி வை.கோ ஸார்.

Asiya Omar said...

shhhhhhhhhhh..semai.viji.

Jaleela Kamal said...

rompa arumai
ithai link kodungk
aduththu pathivil kizee en link koduththu sollidungkal

கோமதி அரசு said...

கத்திரிக்காய் பிரட்டல் மிக நன்றாக இருக்கிறது.