
Saturday, November 2, 2013
Thursday, June 27, 2013
டபுள் பீன்ஸ் கூட்டு
தேவையானவை
டபுள் பீன்ஸ் ஊற வைத்தது 1 கப்
கடலைபருப்பு 2 தே . க
உப்பு தேவைக்கேப்ப
அரைக்க
தேங்காய் துறுவியது 1/4 கப்
உளுத்தம் பருப்பு 1 தே.க
மிளகு 1/4 தே.க
வற்றல் மிளகாய் 1
சீரகம் 1/2 தே.க
தாளிக்க
எண்ணெய் 1 தே.க
கடுகு 1/2 தெ.க
வற்றல் மிளகாய் 1
உளுத்தம் பருப்பு 1/4 தே.க
கறிவேப்பிலை கொஞ்சம்
பெருங்காயத்தூள் 1/4 தே.க
செய்முறை
டபுள் பீன்ஸை 24 மணிநேரம் ஊறவைத்து எடுக்கவும்.( எங்க வீட்டில் கடலைபரூப்பு பதில் வேர்க்கடலை சேர்த்தும் செய்வதுண்டு
)
ஒரு கடாயில் அரைக்கயுள்ளதை தேங்காய தவிர மற்ற எல்லாவற்றையும் நல்ல மணம் வரும் வரை வறுத்தெடுக்கவும்(ட்ர ரோஸ்ட்).
பாத்திரத்தில் டபுள் பீன்ஸ்+கடலைபருப்பு உப்பு சேர்த்து வேகவைத்து எடுக்கவும்.
தேங்காயும் சேர்த்து வறுத்து வைத்துள்ள மசாலா பொருட்களோடு அரைத்தெடுக்கவும்.
அரைத்த விழுதோடு கொஞ்சம் தண்ணிர் சேர்த்து பத்து நிமிடம் கொதிக்கவிடவும். நன்றாக கொதித்ததும் தாளிக்கயுள்ளதை சேர்த்து தாளித்தெடுக்கவும்.
இது சாதத்தோடு சேர்த்து சாப்பிட நல்ல ஹெல்தியான கூட்டு ரெடி.
இதேயே சப்பாத்தி, பூரிக்கு சைட் டிஷ்ஷாக சாப்பிடனும் என்றால் கொஞ்சம் மாசாலாவை மாற்றி செய்தால் போதும்
வெங்காயம், தக்காளி 1 எடுத்து அரிந்து அதை நன்றாக வதக்கி பூண்டு, இஞ்ஞி பச்சமிளகாய் விழுது சேர்த்து வதக்கி கொஞ்சம் கரம் மசாலா அல்லது கிச்சன் கிங் மசாலா + கஸ்தூரி மேத்தி சேர்த்து நன்றாக வதக்கி காரத்திற்கேற்ப்ப சில்லி பௌடர் சேர்த்து உப்பு சேர்த்து நன்றாக வதிக்கி விட்டு தளர்வாக வேண்டுவர்கள் மேலும் கொஞ்சம் தண்ணிர் சேர்த்து கிளறி எடுத்தால் சுவையான ப்ரோட்டின் சப்ஜி ரெடி.
செய்து பார்த்து உங்க கமெண்ட்ஸை சொல்லுங்க.

Friday, May 31, 2013
ஒட்ஸ் உப்புமா
தேவையானவை.
ஒட்ஸ்(Old Fashion Oats) 1 கப்
எண்ணெய் 1 தே.க
மிளகாய் வற்றல் 1
பச்சைமிள்காய் 1
வெங்காயம் 1
தக்காளீ 1
பச்சை பட்டாணி 1 தே.க
இஞ்ஞி கொஞ்சம்
தாளிக்க தேவையாவ அளவு
உப்பு
கடுகு
கறிவேப்பிலை
உளுத்தம் பருப்பு
கடலை பருப்பு
செய்முறை
ஒட்ஸை வெறும் கடாயில் வாசனை வரும் வரை வறுக்கவும். சிவக்க கூடாது.
சூடு ஆறியதும் மிக்ஸியில் பொடிக்கவும்.
வெங்காயம் பொடியாக அரிந்து வைக்கவும்.
தக்காளி பொடியாக அரியவும்
பச்சைமிளகாயை நீட்டமாக வெட்டிவைக்கவும்,
கடாயில் என்ணெய் விட்டு தாளிக்கயுள்ளதை தாளித்து பின் வெங்காயம், தக்காளி, பச்சை பட்டாணி சேர்த்து வதக்கியதும் அரை கப் தண்ணிர் உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.
கொதித்ததும் பொடித்துள்ள ஒட்ஸை சேர்த்து நன்றாக கிளறி குறைந்த தீயில் ஐந்து நிமிடம் வைக்கவும்.
ஒட்ஸ் சீக்கிரம் வெந்து விடும்.
சுவையான எளிதில் செய்யகூடிய ஒட்ஸ் உப்புமா.
ஹெல்தி+டயட் சிற்றுண்டி.
குறிப்பு: ஒட்ஸ் பிடிக்காதவர்கள் இதில் கொஞ்சம் ரவை(கோதுமை ரவை) சேர்த்தும் செய்யலாம்.


Tuesday, April 16, 2013
நினைவாஞ்சலி


Saturday, February 2, 2013
டோர்டிட்யா பிஸ்ஸா
டோர்ட்டியா பிஸ்ஸா
தேவையானவை
டோர்டியா 1(அவரவர் தேவைகேற்ப்ப)
பிஸ்ஸா சாஸ்
விரும்பிய காய்கறிகள்
துறுவிய சீஸ்
செய்முறை
டோர்டியாவில் டொமொட்டோ சாஸை நனறாக ஒரு கோட் ஸ்ப்ரட் செய்து அதன் மேல் விரும்பியா காய்கறிகள்( மஷ்ரூம், குடமிளகாய், ப்ரோக்கலி,ஆனியன்,ஆர்டிசோக் ஆலிவ்ஸ் பைனாப்பிள்) இங்கு நான் குழந்தைகளுக்காக வெறும் சீஸ் பிஸ்ஸா செய்திருக்கேன். ஒரு கைபிடிக்கும் மேல் கொஞ்சம் துறுவிய சீஸை அதன் மேல் தூவி அவனில் வைத்து எடுத்தால் சூப்பர் டோர்டியா பிஸ்ஸா ரெடி.
எல்லோரும் எளிதில் செய்து அசத்தலாம். சுவையும் மிக நன்றாக இருந்தது. எங்க வீட்டில் வந்த கெஸ்ட்+ குழந்தைகள் எல்லார்ம் விரும்பி சாப்பிட்டாங்க யாரும் நம்பவே இல்லை இது டோர்டியாவில் செய்தது என்று சொன்னதும் சான்ஸே இல்லை ரொம்ப நன்றாக இருந்தது என்று சொல்லி அசத்திட்டாங்க.
நான் இங்கு வீட் (கோதுமையில் செய்தேன்) இதே போல் கார்ன் டோர்டியாவில் செய்யலாம்.
நான் ப்ர்ட் டோஸ்டர் ஒவனில் செய்தேன்.
Monday, January 28, 2013
பருப்பு தொவையல்
பருப்பு தொவையல்
தேவையானவை
துவரம் பருப்பு 1/4 கப்
மிளகாய் வற்றல் 2
தேங்காய் துருவல் 1 தே.க (விரும்பினால்)
பெருங்காயத்தூள் 1/2 தே.க
உப்பு தேவைகேற்ப்ப
பூண்டு (விரும்பினால்) 2 பல்.
நெய் அல்லது எண்ணெய் 1/2 தே.க
செய்முறை
கடாயில் நெய் விட்டு பெருங்காயத்தூள், மிளகாய் வற்றல், பருப்பு எல்லாவற்றையும் சேர்த்து மிதமான தீயில் பொன்நிறாமாக வறுக்கவும்.
சூடு ஆறியதும் மிக்ஸியில் முதலில் பருப்பு வகைகளை போட்டு பொடித்து கொள்ளாவும்.
அடுத்து உப்பு, தேங்காய்த்துருவல் சேர்த்து ரவை பதத்தில் (கொஞ்சம் தண்ணிர் தெளித்து) அரைத்தெடுக்கவும்.
வாய்க்கு ருசியாகவும், ப்ரோட்டின்ஸ் அடங்கியதுமான ஒரு நல்ல தொவையல் ரெடி.
இதற்க்கு மேட்சிங் மிளகு ரசம் அப்பளம் தொட்டு சாப்பிட நன்றாக இருக்கும்.
மிளகு குழம்பு அல்லது, வற்றல் குழம்பும் நன்றாக இருக்கும்.
எனக்கு 2 வாரமாக காய்ச்சல்,சளி+இருமல். வாய் கசப்பு இருக்கிறதனால் இதை செய்து சாப்பிடனும் போல் இருந்தது.
வாய்க்கு ருசியாக நன்றாக இருந்தது.
Tuesday, January 22, 2013
க்ரான்பெர்ரி ஊறுகாய்(Cranberry Pickle)
க்ரான்பெர்ரி ஊறுகாய்
தேவையானவை
க்ரான்பெர்ரி காய்கள் 1 கப்
மிளாகாய்த்தூள் ½ தே.க(காரத்திற்கேப்ப)
கடுகு ¼ தே.க
மஞ்சள்த்தூள் ¼ தே.க
வெந்தயத்தூள் ¼ தே.க
நல்லெண்ணெய் ½ தே.க
பெருங்காயத்தூள் ¼ தே.க
உப்பு தேவைகேற்ப்ப
செய்முறை
ஒரு பாத்திரத்தில் க்ரான்பெர்ரையை நன்றாக தண்ணிர் விட்டு அலசி ஒரு பேப்பர் டவலால் நன்றாக துடைத்தெடுக்கவும், அதை இரண்டாக அரியவும்.(அல்லது முழுதுமாகவும்) போடலாம்.
கடாயில் எண்ண்ய் விட்டு காய்ந்ததும் கடுகு போடவும், பின் வெந்தய்த்தூள், மஞ்சள்த்தூள், பெருங்காயத்தூள், மிளாகாய்த்தூள் போட்டு க்ரான்பெர்ரியையும் போடவும், நன்றாக கலந்து உப்பையும் சேர்த்து மீண்டும் கலந்துவிடவும்.இதை நல்ல ஜாடியில் அல்லது பாட்டிலில் போட்டுவைக்கவும். உடனேயும் தொட்டு சாப்பிடலாம், ஒரிரண்டு நாட்கள் கழிந்து சாப்பிட்டால் மேலும் நல்ல ஊறி ருசியும் நன்றாக இருக்கும். ப்ரிட்ஜில் வைத்தெடுத்தால் இரண்டு மாதங்கள் வரை கெடாமல் இருக்கும்.இதில் நிறய்ய மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளது.

Saturday, January 19, 2013
பூசனிக்காய் கூட்டு
வெள்ள பூசனிக்காய் கூட்டு
தேவையானவை
வெள்ளை பூசனிக்காய் 1 கப் (துண்டுகளாக்கியது)
கடலை பருப்பு 2 தே.க
தேங்காய் 4 தே.க (துறுவியது)
சீரகம் 1/2 தே.க
மிளகாய்வற்றல் 1
உப்பு தேவைகேற்ப்ப
மஞ்சள்தூள் 1/2 தே.க
தாளிக்க
எண்ணெய் 1/2 தே.க
கடுகு 1/2 தே.க
உளுத்தம்பருப்பு 1/2 தே.க
பெருங்காயத்தூள் 1/4 தே.க
மிளாகாய்வற்றல் 1
கறிவேப்பிலை கொஞ்சம்
செய்முறை
பூசனித்துண்டுகள், கடலைபருப்பு உப்பு சேர்த்து தண்ணிரில் 15 நிமிடம் வேகவைக்கவும்.
தேங்காய்,சீரகம், மிளாகாய்வற்றல் சேர்த்து கொரகொரப்பாக அரைத்தெடுக்கவும்.
வெந்த பூசனித்துண்டுகளோடு அரைத்துள்ள விழுதை சேர்த்து மேலும் 10 நிமிடம் வேக்வைக்கவும்.
தாளிக்கயுள்ளதை தாளித்து கூட்டில் போட்டு நன்றாக கிளறிவிடவும்.
இந்த கூட்டு கலந்த சாததிற்க்கும், வற்றல்குழம்பு சேர்த்து கலந்த சாததிற்க்கும் தொட்டு சாப்பிட நன்றாக இருக்கும்.
நல்ல நார்ச்சத்துள்ளா காய் உடம்பிற்க்கு ஏற்றது.
குறிப்பு: விருப்பமான பருப்புகள் சேர்க்கலாம். நான் இதில் சில நேரம் பச்சை வேர்க்கடலை, கொண்டைகடலை, ஊற வைத்த பயறுவகைகள் சேர்ப்பேன். இன்று ப்ரெஸ்பச்சை துவரை பட்டாணி சேர்த்து செய்துள்ளேன்.
Monday, January 14, 2013
பொங்கல் வாழ்த்துக்கள்
என் வலைதள அன்பு நட்புள்ளங்களுக்கு இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.
தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற நல்வாக்குகளோடு எல்லோருக்கும் வாழ்வில் இனிய நாளாக பொங்கட்டும் என்று வாழ்த்துக்கிறேன்.
தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற நல்வாக்குகளோடு எல்லோருக்கும் வாழ்வில் இனிய நாளாக பொங்கட்டும் என்று வாழ்த்துக்கிறேன்.
Saturday, January 12, 2013
நெல்லிக்காய் தொக்கு
நெல்லிக்காய தொக்கு
தேவையானவை
நெல்லிக்காய் 5 பெரிது
மிளகாயத்தூள் ½ தே.க
மஞ்சள் தூள் ¼ தே.க
வெந்தயத்தூள் ¼ தே.க
நல்லெண்னெய் ½ தே.க
பெருங்காயத்தூள் ¼ தே.க
செய்முறை
நெல்லிக்காயை நல்ல
தண்ணிரில் கழுவி ஒரு பாத்திரத்தில் உப்பு போட்டு 2 கப் தண்ணிர் விட்டு வேகவிடவும்.
பத்துநிமிடம் கழிந்து
நெல்லிக்காயை விரலகளாக் அமுக்கினால் வில்லைகளாக வருவது தான் சரியான பதம்.
தண்னிரை நல்ல வடிகட்டி
எடுக்கவும்.
கடாயில் எண்ணெய்
விட்டு சூடானதும் பெருங்காயத்துள், கடுகு,மஞ்சள் தூள், வெந்தயத்தூள்(ட்ரை ரோஸ்ட்) செய்து
வைக்கவும் அதையும் இதனுடன் சேர்த்து வேகவைத்துள்ள நெல்லிக்காயை கொட்டைய எடுத்து அதன்
துண்டுகளை சேர்த்து (மேலும் வேண்டுமானல் கொஞ்சம் உப்பு )சேர்த்து நன்றாக வதக்கி மேலும்
அரை சிட்டிகை எண்ணெய் சேர்த்து நன்றாக பச்சை வாசனை போக வதக்கி எடுக்கவும். இதில் எல்லா
வகை சாததிற்க்கும் மேட்சிங்க் ஊறுக்காய். ஹெல்தி ஊறுகாய்.
Tuesday, January 8, 2013
டொமேட்டோ சீஸ் பாஸ்தா
தேவையானவை
டொமேட்டோ பாஸ்தா 1 கப்
பார்மாஸான் சீஸ் 1/4 கப்
பட்டர் 1 தே.க
உப்பு தேவைகேற்ப்ப
பேஸில் இலை கொஞ்சம்
வெங்காயம் பெரிது 1 பெரிய துண்டுகளாக அரிந்தது
கேப்ஸிகம் 1 துண்டுகளாக்கியது
ப்ரோசன் பீஸ் 1/4 கப்
சில்லி ப்ளேக்ஸ் காரத்திற்கேப்ப
ஓலிவ் எண்னெய் 1/2 தே.க
செய்முறை
இந்த பாஸ்தா டொமேட்டோ ப்யூரியில் செய்து விற்கபடுகிறது.
இதற்க்கு தனியாக டொமேட்டோ சாஸ் தேவையில்லை.
பாஸ்தாவை நிறய்ய தண்னிர் விட்டு வேகவிடவும். கையில் எடுத்து பார்த்து அதை ஒட்டாமல் ப்ரஸ் செய்தால் நல்ல ப்ரஸ்ஸானல் வெந்து இருக்கிறது.
கடாயில் பட்டர்+ஒலிவ் எண்ணெய் விட்டு சூடானதும் சில்லி ப்ளேக்ஸ் போடவும் அடுத்து பொடியாக அரிந்துள்ள பேஸில் இலைகளையும் போட்டு வெங்காயம், கேப்ஸிகம், பீஸ் எல்லாவற்றையும் கலந்து நன்றாக வதக்கவும். க்ரன்சியாக வதக்க வேண்டும் நல்ல மசிய விடவேண்டாம், வெந்த பாஸ்தாவை அதில் சேர்த்து துறுவிய சிஸ் தூவி குறைந்த தீயில் கலந்து விட்டு மூடி விடவும். ஐந்து நிமிடம் கழிந்து சர்விங் பௌலில் மாற்றி மேல் பேஸில் இலை, துறுவிய சீஸ் சேர்த்து பரிமாறவும்.
குட்டிஸ், பெரியவங்க எல்லோருக்கும் பிடித்த ஹெல்தியான உணவு.
Tuesday, January 1, 2013
My New Blog Introduction
Hi my dear Friends,
I launched my new Music blog.
Welcome to my Music blog.
I want your all coperations and blessings.
Here u will get all devotional, carnatic, semi classical,
Instruments, filim and country musics.
I hope u all like my new blog.Pls kindly fwd & introduce to your friends and families.
here is the link: http://sapthaswar.blogspot.com/
WISH YOU A HAPPY NEW YEAR 2013
Wish you a Happy New Year
2013
எல்லா என் ப்ளாக் வருகை தரும் நண்பர்களுக்கு என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
Subscribe to:
Posts (Atom)