Thursday, December 31, 2009
New Year 2010
எல்லா என் தோழிகளுக்கும், என் பாலோவர்ஸுக்கும் என் ப்ளாக் வருகையாளருக்கும்
விஜிஸ் வெஜ் கிச்சனின் சார்பாகவும் என் இணிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
Wednesday, December 30, 2009
உருளை போண்டா
உருளை கிழங்கு போண்டா
தேவையானவை
ஸ்டப் செய்வதற்க்கு
--------------------------
உருளை கிழங்கு - 2
பச்சை மிளகாய் - 1
இஞ்ஞி - 1/2 தே.க
மஞ்சள் தூள் - 1/4 தே.க
கொத்தமல்லி இலை - கொஞ்சம்
உப்பு - தேவைகேற்ப்ப
போண்டா மாவு தயாரிக்க
------------------------------
கடலை மாவு - 1 கப்
அரிசி மாவு - 1/2 தே.க
மிளகாய் தூள் - 1/2 தே.க
உப்பு - தேவைகேற்ப்ப
பொரிக்க
----------------
எண்னெய் - 2 கப்
செய்முறை
----------------
உருளைகிழங்கை வேகவைத்து மசிக்கவும்.
பொடியாக அரிந்த பச்சைமிளகாய்+இஞ்ஞி,கொத்தமல்லி இலை
மஞ்சள் தூள், உப்பு போட்டு நன்றாக பிசைந்து
சின்ன உருண்டைகளாக பிடித்து வைக்கவும்.
கடலை மாவில்,மிளகாய் தூள், உப்பு, போட்டு தோசை
மாவு பதத்தில் கலந்து வைக்கவும்.
உருட்டி வைத்துள்ள உருண்டைகளை ஒவ்வொன்றாக
எடுத்து மாவில் தோய்த்து எண்ணெயில் போட்டு
பொன்னிறாமாக பொரித்தெடுக்கவும்.
இதற்க்கு தொட்டுகொள்ள சட்ணி அல்லது சாஸ்ஸுடன்
சாப்பிட நன்றாக இருக்கும்.
தேவையானவை
ஸ்டப் செய்வதற்க்கு
--------------------------
உருளை கிழங்கு - 2
பச்சை மிளகாய் - 1
இஞ்ஞி - 1/2 தே.க
மஞ்சள் தூள் - 1/4 தே.க
கொத்தமல்லி இலை - கொஞ்சம்
உப்பு - தேவைகேற்ப்ப
போண்டா மாவு தயாரிக்க
------------------------------
கடலை மாவு - 1 கப்
அரிசி மாவு - 1/2 தே.க
மிளகாய் தூள் - 1/2 தே.க
உப்பு - தேவைகேற்ப்ப
பொரிக்க
----------------
எண்னெய் - 2 கப்
செய்முறை
----------------
உருளைகிழங்கை வேகவைத்து மசிக்கவும்.
பொடியாக அரிந்த பச்சைமிளகாய்+இஞ்ஞி,கொத்தமல்லி இலை
மஞ்சள் தூள், உப்பு போட்டு நன்றாக பிசைந்து
சின்ன உருண்டைகளாக பிடித்து வைக்கவும்.
கடலை மாவில்,மிளகாய் தூள், உப்பு, போட்டு தோசை
மாவு பதத்தில் கலந்து வைக்கவும்.
உருட்டி வைத்துள்ள உருண்டைகளை ஒவ்வொன்றாக
எடுத்து மாவில் தோய்த்து எண்ணெயில் போட்டு
பொன்னிறாமாக பொரித்தெடுக்கவும்.
இதற்க்கு தொட்டுகொள்ள சட்ணி அல்லது சாஸ்ஸுடன்
சாப்பிட நன்றாக இருக்கும்.
Thursday, December 24, 2009
கோவக்காய் உருளை ப்ரை
தேவையானவை
---------------
கோவக்காய் - 1 கப்
காரட்,உருளை - 1/4 கப்
தாளிக்க
-----------
எண்னெய் - 1 தே.க
கடுகு - 1/2 தே.க
சீரகம் - 1/4 தே.க
வற்றல் மிளகாய் - 1
பெருங்காயதூள் - 1/4 தே.க
செய்முறை
--------
கோவைக்காயை நல்ல வட்டமாக நறுக்கவும்.
உருளை+காரட் தோல் சீவி வட்டமாக நறுக்கவும்.
பான் அல்லது கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்கயுள்ளதை
போட்டு தாளித்து காய்களை போட்டு மஞ்சள் தூள் சேர்த்து
அடுப்பை குறந்த தீயில் வைத்து நல்ல வதக்கவும்.
ஐந்து நிமிடம் வதங்கிய பின் உப்பு சேர்த்து
மேலும் பத்து நிமிடம் வதக்கவும்.
நல்ல வதங்கி மொறு மொறு கோவக்காய் ப்ரை ரெடி
குறிப்பு: எந்த காயானும் ப்ரை என்றால் முதலில்
உப்பு சேர்க்காமல் குறைந்த தீயில் வைத்து
மூடி போடாமல் வதக்கவும்,
கொஞ்சம் வதங்கிய பின் உப்பு சேர்த்தால் நல்லா இருக்கும்.
இந்தமாதிரி செய்தால் காய் நல்ல மொறுமொறுவென்று வதங்கி வரும்.
Tuesday, December 22, 2009
கேப்ஸிகம் ப்ரைட் ரைஸ்
தேவையானவை
பாச்மதி அரிசி - 1கப்
கேப்ஸிகம் - 1
வெங்காயம் - 1
பட்டானி - 1/2 தே.க
கேரட் - 1
தக்காளி - 1
இஞ்ஞி - 1/4 தே.க
பூண்டு - 1/4 தே.க
உப்பு - தேவைகேற்ப்ப
நெய் - 2 தே.க
or
பட்டர்
செய்முறை
பாஸ்மதி அரிசியை நல்ல கழுவி பத்து நிமிடம் ஊறவைக்கவும்.
வெங்காயம், காப்ஸிகம், கேரட் நீளமாக கட் செய்யவும்.
தக்காளியை சின்ன துண்டுகளாக்கவும்.
பட்டானியை ஊறவைக்கவும். ப்ரோசனும் உபயோகிக்கலாம்.
குக்கர் அல்லது பானில் பட்டர் அல்லது நெய் விட்டு
இஞ்ஞி, பூண்டு பேஸ்டு, வெங்காயம், தக்காளி போட்டு ஐந்துநிமிடம்
வதக்கவும்.
தக்காளி,காய்கறிகள் எல்லாம் சேர்த்து மேலும் ஐந்துநிமிடம்
வதக்கி அதில் ஊறவைத்த அரிசி,உப்பு சேர்த்து நன்றாக கலந்து விட்டு
2 கப் தண்னிர் ஊற்றி குக்கர் அல்லது ரைஸ்குக்கரில்
உதிரியாக வேகவைக்கவும்.
கொஞ்சம் பட்டர் அல்லது நெய் போட்டு கொத்தமல்லி இலை
லெமன் ஜூஸ் சேர்த்து கலந்து விட்டு இறக்கவும்.
இது நல்ல பட்டரி டேஸ்டோட கேப்சிகம் ரைஸ் சாப்பிட நன்றாக இருக்கும்.
Saturday, December 19, 2009
அவரை மொச்சை பொரியல்
அவரை மொச்சை பொரியல்
தேவையானவை
---------------------
அவரைக்காய் - 1 கப்
மொச்சை - 1/2 கப்
தேங்காய் துருவல் - 1/2 தே.க
தாளிக்க
----------
எண்னெய் - 1 தே.க
கடுகு - 1/2 தே.க
வற்றல் மிளகாய் - 1
கறிவேப்பிலை - கொஞ்சம்
பெருங்காயதூள் - 1/4 தே.க
செய்முறை
--------------
மொச்சையை ஊற வைக்கவும்.
அவரையை பொசியாக நறுக்கவும்.
பாத்திரத்தில் மொச்சை,அவரை,உப்பு சேர்த்து வேகவைக்கவும்.
கடாயில் அல்லது பானில் தாளிக்கயுள்ளதை தாளித்து
வெந்த அவரை,மொச்சை,தேங்காய் துருவல் சேர்த்து கிளறிவிட்டு
ஐந்து நிமிடம் மூடி போட்டு வேகவைக்கவும்.
குறிப்பு: நிலக்கலை, கடலைபருப்பு, சன்னா, பட்டாணி
ஏதுவானலும் சேர்த்து செய்யலாம். வெங்காயம் சேர்த்தும்
செய்யலாம்.
வெஜ் ப்ரைட் ரைஸ்
வெஜ் ப்ரைட் ரைஸ்
-----------------
தேவையானவை
---------------
பாஸ்மதி அரிசி - 1 கப்
காரட் - 1
க்ரின் பீஸ் - 1/2 கப்
காப்ஸிகம் - 1
வெங்காயம் - 1
உருளை - 1
பீன்ஸ் - 1/2 கப்
தக்காளி - 1
மசாலா
-------
பிரியாணி இலை - 1
பூண்டு - 1
இஞ்ஞி - 1
சில்லி சாஸ் - 1 தே.க
நெய் - 1/2 தே.க
எண்னெய் - 1/2 தே.க
செய்முறை
----------
பாஸ்மதி அரிசியை தண்னிரில் அலசி
பத்து நிமிடம் ஊற வைக்கவும்.
காய்கறிகளை 1” நீளத்தில் மெல்லிதாக கட் செய்யவும்.
வெங்காயத்தை நீளமாகவும், தக்காளியை டைஸ்ஸகாகவும்
கட் செய்யவும்.
இஞ்ஞி, பூண்டு பேஸ்டாகவும் சேர்க்கலாம், இல்லை அதை
சீவலில் சீவி சேர்க்கவும்.
குக்கர் பாத்திரத்தில் எண்னெய்+நெய் விட்டு
மாசால சாமன்களை போட்டு வறுத்து அதில்
வெங்காயம், தக்காளியையும் போட்டு வதக்கி
பின் காயகறிகளை போட்டு வதக்கி ஊற வைத்துள்ள
அரிசியும் போட்டு வதக்கி சில்லி சாஸ்,உப்பு சேர்த்து 2 கப்
தண்ணிர் விட்டு குக்கரில் வேகவிடவும்.
அரிசியை தனியாகவும் வேகவத்தும் காய்கறி கலவையுடன்
சேர்க்கலாம்.
குக்கரில் 1 விசில் வைத்தால் போதும்.
குறிப்பு:அரிசி குழைய கூடாது காய்கறிகளும் நல்ல வேகவேண்டாம்.
இதற்க்கு தக்காளி வெங்காயம் ரைத்தா சேர்த்து சாப்பிடலாம்.
தேன்குழல் முறுக்கு
தேவையானவை
அரிசிமாவு - 1 கப்
உளிந்து மாவு - 1 தே.க
சீரகம் - 1/2 தே.க
உப்பு - தேவைகேற்ப்ப
எண்னெய் - பொறிக்க
செய்முறை
அரிசிமாவு+உளுந்து மாவு,சீரகம், உப்பு எல்லாவற்றையும்
ஒன்றாக 1/2 தே.க சூடான எண்ணெயும் சேர்த்து நல்ல
கெட்டியாக பிசைந்து முறுக்கு பிழியும் அச்சில் போட்டு
பிழியவும்.
அடுப்பை குறைந்த தீயில் வைத்து திருப்பி விட்டு நல்ல பொன்னிறமாக
சூட்டு எடுக்கவும்.
இதை காற்று புகாத டப்பாவில் போடு வைத்து சாப்பிடலாம்.
குறிப்பு: அரிசியை மிஷினில் அல்லது மிக்ஸியில் பொடித்தும்
செய்யலாம். கடையில் ரெடியாக கிடைக்கும் அரிசிமாவையும்
பயன்படுத்தலாம். உளுந்தை வெறும் வாணலியில் வறுத்து
மிக்சியில் பொடிக்கலாம்,உளுந்து மாவும் கடையில் கிடைப்பதை
வைத்தும் செய்யலாம்.
Friday, December 18, 2009
காலிஃப்ளவர் ப்ரை
தேவையானவை
காலிப்ஃளவர் - 1
மிளகாய் தூள் - 1 தே.க
கார்ன் மாவு - 1 தே.க
அரிசிமாவு - 1 தே.க
உப்பு - தேவைகேற்ப்ப
எண்னெய் - பொறிக்க
செய்முறை
பாத்திரத்தில் 2 கப் தண்ணிர் விட்டு கொதிக்க வைக்கவும்.
காலிப்ளவரை சின்ன பூக்களாக பிரித்து கொதிக்க்கும் வெந்நிரில் போட்டு எடுத்து வடிய வைக்கவும்.
பாத்திரத்தில் அல்லது ட்ரேயில் எல்லா மாவுகளயும்,உப்பையும்போட்டு கொஞ்சம் தண்ணிர் தெளித்து பிசறி வைத்து கொள்ளவும்.
காலிஃபளவரை அதில் போடு பிசறி சூடாகியுள்ள எண்ணெயில்
போட்டு பொன்னிறமாக பொறிக்கவும்.
இதை சாததோடவும், வெறும் ஸ்னாக்காவும் சாப்பிடலாம்.
நொடியில் காலியாகிவிடும்.
Tuesday, December 15, 2009
பைனாப்பிள் ரவா கேசரி
தேவையானவை
---------------------
ரவை - 1 கப்
சீனி - 3/4 கப்
நெய் - 1/2 கப்
பைனாப்பிள் எஸன்ஸ் - 1/2 தே.க
முந்திரி - 1/2 தே.க
கிஸ்மிஸ் - 1/4 தே.க
கேசரி கலர் - 1/4 தே.க
செய்முறை
------------------
கடாயில் கொஞ்சம் நெய் விட்டு கிஸ்மிஸ்,முந்திரி சேர்த்து
வறுக்கவும்.
அதே கடாயில் மீண்டும் கொஞ்சம் நெய் விட்டு
அடுப்பை நிதானமாக வைத்து ரவையை சேர்த்து
வாசனை போகும் வரை வறுக்கவும்.
கடாயில் 2 கப் தண்னிர் விட்டு கொதிக்க வைக்கவும்.
ரவையை சேர்த்து வேகவிடவும். வெந்ததும் பைனாப்பிள்
எஸன்ஸ்,சீனி, கேசரி கலர் சேர்த்து மேலும் நன்றாக கிளறி அடுப்பை குறைந்த தீயில்
வைத்து வேகவிடவும்.
கடாயில் ஒட்டாமல் வரும் போது கொஞ்சம் கொஞ்சமாக
நெய் சேர்த்து கிளறவும்.
நன்றாக நெய் மிதந்து பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் போது
கிஸ்மிஸ்,முந்திரி,ஏலதூள் தூவி ஒரு நெய் தடவிய தட்டில்
கொட்டி வில்லைகளாக போடவும். வில்லைகள் போடமலும்
பரிமாறலாம்.
Friday, December 11, 2009
பீர்க்கங்காய் தால்
தேவையானவை
பீர்கங்காய் - 1
பச்ச பருப்பு - 1/2 கப்( அல்லது துவரம் பருப்பு)
மஞ்சள் தூள் - 1/2 தே.க
உப்பு - தேவைகேற்ப்ப
தாளிக்க
எண்ணெய் - 1 தே.க
கடுகு - 1/2 தே.க
சீரகம் - 1/4 தே.க
கறிவேப்பிலை - கொஞ்சம்
செய்முறை
பீர்கங்காய தோல் சீவி மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வேகவைத்த்து கொள்ளவும்.
பருப்பை வேகவைத்து வெந்தகாயில் சேர்த்து மேலும் பத்துநிமிடம் வேகவைக்கவும்.
நெய் அல்லது எண்ணெயில் சீரகம், கடுகு கறிவேப்பிலை,
வற்றல் மிளகாய் போட்டு தாளிக்கவும்.
இது குழந்தைகள் முதல் பெரியவர் வரை சாப்பிடலாம் அதிகம் காரம் ,மசாலாவும் கிடையாது.
இது சப்பாத்தி,சாதம் போன்றவைக்கு நன்றாக இருக்கும்.
Thursday, December 10, 2009
Tuesday, December 8, 2009
எண்னெய் கத்தரிக்காய் குழம்பு
தேவையானவை
----------------------
சின்ன கத்தரிக்காய் - 8
எண்ணெய் - 3 தே.க (நல்லெண்ய்)
புளி - நெல்லிகாய் அளவு
உப்பு - தேவைகேற்ப்ப
மசாலா
----------
வறுத்து பொடிக்க
வரமிளகாய் - 4
தனியா - 2 தே.க
உளுந்து பருப்பு - 2 தே.க
கடலை பருப்பு - 1 தே.க
எள் - 1/2 தே.க
தாளிக்க
----------
எண்ணெய் - 2 தே.க
கடுகு - 1/2 தே.க
வெந்தயம் - 1/2 தே.க
பெருங்காயம் - 1/4 தே.க
கறிவேப்பிலை - கொஞ்சம்
செய்முறை
-------------
மசாலா பொருட்களை எண்னெய் விடாமல் வறுத்து
பொடித்து கொள்ளவும்.
கத்தரிக்காயை நான்காக பிளந்து கொண்டு அரைத்துள்ள
மசாலா பொடியை ஒரு ஸ்பூனால் கத்தரிகாயினுள் நிரப்பவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு தாளிக்கயுள்ளதை தாளித்து
கத்தரிக்காயை போட்டு ஐந்து நிமிடம் நன்கு வதக்கவும்.
வதங்கிய பின் உப்பு, புளியை நன்கு கெட்டியாக கரைத்து
வதங்கியுள்ள கத்தரிக்காயில் சேர்க்கவும்.
மேலும் பத்து நிமிடம் நல்ல கொதிக்கவிட்டு இறக்கவும்.
இது எல்லாவகையான சாததிற்க்கும் நல்ல ஏற்றது.
Thursday, November 19, 2009
தேன்குழல் முறுக்கு
தேவையானவை
---------------------
அரிசிமாவு - 1கப்
உளுத்தம் மாவு - 1/2 தே.க
உப்பு - தேவைகேற்ப்ப
சீரகம் - 1/2 தே.க
எண்ணெய் - பொரிக்க
செய்முறை
அரிசிமாவு, உளுத்தம்மாவு சீரகம்,உப்பு எல்லாவற்றையும்
சூடாகியிருக்கும் எண்னெயில் இருந்து 1 தே.க விட்டு
கலந்து கொஞ்சம் தண்ணிர் விட்டு பிசைந்து கொள்ளவும்.
மாவு ரொம்ப கெட்டியாகவும், தளர்வாகவும் இல்லாமல்
இருக்கனும்.
கடாயில் எண்ணெய் விட்டு சூடானவுடன் மாவை தேன்குழல்
முறுக்கு அச்சில் போட்டு பிழிந்து பொன்நிறமாக பொரித்து
எடுக்கவும்.
இதை காற்று புகாத டப்பாவில் போட்டு வைத்தால் 1 வாரம்
வரை கெடாமல் இருக்கும்.
மனகொம்பு
தேவையானவை
பச்சரிசி மாவு - 1 கப்
பச்சபருப்பு மாவு - 1/2கப்
பொட்டுக்கடலை மாவு - 1/2 கப்
உப்பு - தேவைகேற்ப்ப
வெண்னெய் - 1/4 தே.க
செய்முறை
பச்சபருப்பை வெறும் கடாயில் நல்ல
வாசனை போக வறுத்து பொடிக்கவும்.
பொட்டுக்க்டலையை பொடிக்கவும்.
பச்சரிசி மாவு+பொட்டுக்க்டலை பருப்பு மாவு+பச்சப்ருப்பு மாவு,வெண்ணெய்,உப்பு எல்லாவற்றையும் ஒன்றாக கொஞ்சம் தண்ணிர் தெளித்து கையில் பிசைவது போல்
வரும்போது எடுத்து மனகொம்பு முறுக்கு அச்சில் போட்டு எண்ணெய் சூடானதும் பிழிந்து பொன்னிறமாக வேகவைத்து எடுக்கவும்.
இதை காற்று புகாத டப்ப்பாவில் போட்டு வைத்தால் நல்ல மொறுவென்று இருக்கும்.
இதில் நிறய்ய ப்ரோட்டின்ஸ் இருப்பதினால் குழந்தைகளுக்கு ஏற்ற ஸ்னாக்.
Tuesday, November 17, 2009
உளுந்து வடை
உளுந்து வடை
--------------
உளுந்து - 1கப்
உப்பு - தேவைகேற்ப்ப
எண்னெய் - பொறிக்க
கறிவேப்பிலை - கொஞ்சம்
செய்முறை
உளுந்தை 2 மணிநேரம் ஊறவைக்கவும்.
நல்ல தண்னிரை வடித்து ப்ளண்டரில் அல்லது
க்ரைண்டரில் தண்ன்ரிர் கொஞ்சமாக தெளித்து உப்பும்
சேர்த்து நல்ல கெட்டியாக அரைக்கவும்.
உடனே செய்வதாயிருந்தால் 1 தே.க அரிசிமாவு சேர்த்து
செய்தால் நல்ல மொறு மொறு வடையாக சாப்பிடலாம்.
ப்ரிட்ஜில் வைத்து செய்தால் மாவு நல்ல கெட்டியாக இருக்கும்.
இதில் விரும்பினால் வெங்காயம், பச்சமிளகாய் சேர்த்தும்
செய்யலாம்.
குறிப்பு: மாவு வடையாக தட்ட வராமல் இருந்தால் அதில்
கொஞ்சம் அரிசிமாவு சேர்த்து செய்தால் நன்றாக இருக்கும்.
இதற்க்கு தேங்காய் சட்னி நன்றாக இருக்கும்.
காலிப்ஃளவர் பராத்தா
தேவையானவை
----------------
கோதுமை மாவு - 2 கப்
நெய்
ஸ்டப் செய்வதற்க்கு
--------------------------
காஃலிப்ளவர் - துறுவியது 1 கப்
பச்சைமிளகாய் - 1 அரிந்தது
சீரகம் - 1/4 தே.க
கொத்தமல்லி இலை - கொஞ்சம் அரிந்தது
உப்பு - தேவைகேற்ப்ப
செய்முறை
-------------
கோதுமைமாவை நன்றாக தண்னிர் சேர்த்து
பிசைந்து அரைமணி நேரம் வைக்கவும்.
துறுவிய காஃலிப்ளவரை தண்னிர் இல்லாமல் வடித்து வைக்கவும்.
கடாயில் எண்னெய் விட்டு அதில் சீரகம் போட்டு
பொரிந்தது மீதமுள்ள எல்லாவற்றையும் ஸ்டப்
செய்யவேண்டியவற்றை போட்டு வதக்கி எடுக்கவும்.
ஒரு நெல்லிகாயை அளவு மாவை எடுத்து அதை சின்ன
வட்டமாக இட்டு அதில் நடுவில் ஒரு ஸ்பூன் ஸ்டபிங்
கலவையை எடுத்து வைத்து மூடி எல்லா இடமும் ஒரே
போல பரவலாக வரும்படி இட்டு குறைந்த தீயில் அடுப்பை
வைத்து தோசைகல் போட்டு 2 புறமும் திருப்பி போட்டு கொஞ்சம் நெய் விட்டு தடவி அதை எடுத்து வைக்கவும்.
இதற்க்கு தொட்டு கொள்ள தயிர் அல்லது ஊறுகாய் நன்றாக இருக்கும்.
Subscribe to:
Posts (Atom)