தேவையானவை
சேப்பங்கிழங்கு - 1/4 கிலோ
உப்பு - தேவைகேற்ப்ப
மிளகாய் தூள் - 1/2 தே.க
அரிசிமாவு - 1/4 தே.க
மஞ்சள் தூள் - 1/2 தே.க
தாளிக்க
---------
எண்ணெய் - 1/2 தே.க
கடுகு - 1/2 தே.க
உளுத்தம் பருப்பு - 1/2 தே.க
கறிவேப்பிலை - கொஞ்சம்
பெருங்காயத்தூள் - 1/4 தே.க
செய்முறை
கிழங்கை தோல் சீவி உப்பு,மஞ்சள் தூள் சேர்த்து வேகவைக்கவும்.
குழையாமல் வேகவைக்கவும்.
நல்ல சூடு ஆறிய்பின் அதி சின்ன துண்டுகளாக்கி வைக்கவும்,
கடாயில் என்ணெய் விட்டு அதில் தாளிக்கயுள்ளதை தாளித்து
பிசிறிவைத்துள்ள துண்டுகளை போட்டு குறைந்த தீயில் வறுக்கவும்.
நல்ல கிரிஸ்பியான சேப்பங்கிழங்கு வறுவல் ரெடி.
குறிப்பு: கிழங்கை வேகவைக்காமல் சின்ன துண்டுகளாக்கி எண்ணெயில்
தாளித்த பின் இந்த கிழங்கு துண்டுகளை சேர்த்து வறுத்து எடுக்கலாம்.
நிறய்ய நேரம் தேவைப்படும்.