Monday, March 14, 2011

கடலை குழம்பு (கேரளா ஸ்டைல்)


கறுப்பு கொண்டகடலை 1 கப்
தக்காளி 1 துண்டுகளாக்கியது
வெங்காயம் 1 துண்டுகளாக்கியது
பூண்டு 1 சிறிய துண்டு
இஞ்ஞி 1 சிறிய துண்டு
உப்பு தேவைகேற்ப்ப
மஞ்சள் தூள் 1/2 தே.க

மசாலா

தேங்காய் துறுவியது - 1/4 கப்
பச்சை மிளகாய் - 4
சீரகம் - 1/2 தே.க
பச்சை அரிசி - 1/2 தே.க

தாளிக்க

எண்ணெய் 1 தே.க
கடுகு 1/2 தே.க
சோம்பு 1/2 தே.க
கறிவேப்பிலை கொஞ்சம்


செய்முறை

கொண்டகடலையை முன் தினம் ஊற வைத்து உப்பு சேர்த்து தனியாக வேகவத்து எடுக்கவும்.
பாத்திரத்தில் (தேங்காய எண்னெயாக இருந்தால் ருசி நன்றாக இருக்கும், எண்னெய் விட்டு தாளிக்கயுள்ளதை தாளிக்கவும்.
வெங்காயம், தக்காளி, இஞ்ஞி பூண்டு அரைத்த் பேஸ்ட்(தட்டியது) சேர்த்து வதக்கவும்.
அரைத்த மசாலா சேர்த்து நன்றாக வதக்கவும். பச்சை வாசனை போனதும் வேகவைத்த கடலையை சேர்த்து மேலும் உப்பு தேவையென்றால சேர்த்து வதக்கவும். இது கெட்டியாக இருக்கும். கொஞ்சம் தண்னிர் சேர்த்து மேலும் நன்றாக கிளறி விட்டு வேகவிடவும்.
தளர்வாக இருந்தால் ஊற்றி சாப்பிட நன்றாக இருக்கும்.
இது அரிசி புட்டு, சாதத்திற்க்கும், சப்பாத்திக்கும் தொட்டு சாப்பிட நன்றாக இருக்கும்.
இது கேரளா ஸ்பெஷல்.


6 comments:

Reva said...

Superb recipe viji.... seithu parthu vidugirein..
Reva

Asiya Omar said...

புட்டுக்கு,ஆப்பத்திற்கு இந்தக்கடலை கறி அருமையாக இருக்குமே!செய்து பார்க்க வேண்டும்..

Raks said...

Kadala curry looks very tempting,nice recipe,feel like having it with puttu :)

Aruna Manikandan said...

looks healthy and delicious dear :)

விக்னேஷ்வரி said...

இதுல தேங்காய் மட்டும் போடலைன்னா எங்க ஊர் ஸ்பெஷல். :)

குறையொன்றுமில்லை. said...

சூப்பரான ரெசிப்பி. செய்துட்டேன். புட்டுக்கு நல்ல காம்பினேஷன். நன்றி.