கீரை மிளகூட்டல்
தேவையானவை
கீரை ஒரு கட்டு
பாசிபருப்பு அல்லது துவரம்பருப்பு 1/4 கப்
வற்றல் மிளகாய் 2
மசாலா அரைக்க
தேங்காய துறுவியது 4 தே.கரண்டி
சீரகம் 1/2 டீ ஸ்பூன்
பச்சை அரிசி 1/2 டீ ஸ்பூன்
தாளிக்க
எண்ணெய் 1 தே.க
கடுகு 1/2 தே.க
உளுந்தம்பருப்பு 1/2 தே.க
வற்றல் மிளகாய் 1
கறிவேப்பிலை கொஞ்சம்
செய்முறை
துவரம்பருப்பு அல்லது பாசி பருப்பை வேகவைத்தெடுக்கவும்.
கீரரையை நல்ல மண்போக அலசி பொடியாக அரிந்து வைக்கவும்.
பாத்திரத்தில் எண்னெய் விட்டு தாளிக்கயுள்ளதை போட்டு தாளிக்கவும்.
கீரையை சேர்த்து வதக்கி அதில் வெந்த பருப்பு, உப்பும் சேர்த்து நன்றாக கிளறி விட்டு
கொஞ்சமா தண்னிர் சேர்த்து வேகவிடவும்.
அரைத்துள்ள மசாலாவை சேர்த்து குறைந்த தீயில் 5 நிமிடம் வேகவிடவும்.
கொஞ்சம் தேங்காய எண்ணெய் சேர்த்து கலந்து 5 நிமிடம் வேகவிட்டு
எடுக்கவும். நல்ல கமகம கீரை மிளகூட்டல் ரெடி.
கீரை சாப்பிட பிடிக்காதவங்க கூட இதை விரும்பி சாப்பிடுவாங்க.
சூடான சாதத்தில் இதை ஊற்றி பிசைந்து சாப்பிடலாம். நல்ல ருசியாக இருக்கும்.
இதற்க்கு தொட்டு கொள்ள பொரித்த அப்பளம், நல்ல வாழைக்காய், உருளை வறுவலோடு சாப்பிடலாம்.

6 comments:
I thought milagootal will have milagu in it.. recipe sounds good,yumm!
பார்க்கவே சூப்பர்.விஜி.
நேத்துதான் நான் இதைச் செஞ்சேன், பருப்பு சேர்க்காமல்.
பாலக் கீரை என்பதால் கொஞ்சம் கசூரி மேத்தியை தாளிக்கும்போது சேர்த்தேன்.
Only now i knew pepper is not added to this dish..looks yumm sure try..
சூப்பர் விஜி.
wow...too tempting n healthy...
Tasty appetite
Post a Comment