இன்று என் பிறந்தநாளுக்கு தக்காளி பிரியானி சோன்பப்டியும் தற்போது வரை செய்தேன். மீதி
எனக்கு ரொம்ப பிடிக்கிற அவியலும் இன்றைக்கு இது தான் மெனு. என்னவரும்ம் என் குட்டிஸும் நைட் வெளியில் போய் சாப்பிடலாம் என்று சொல்லிட்டாங்க, அவங்க ட்ரிட் இன்றைக்கு.
தேவையானவை
பாஸ்மதி அரிசி 1 கப்
தக்காளி 4
பச்சைமிளகாய் 2
வெங்காயம் 1
பூண்டு 2
இஞ்ஞி 1 துண்டு
தேங்காய பால் 1/2 கப்
கரம் மசாலா தூள் 1 தே.க
மசாலாவிற்க்கு
பட்டை 1 துண்டு
நெய் 2 தே.க
ஏலம் 2
பிரியாணி இலை 2
செய்முறை
பாஸ்மதி அரிசியை நன்றாக கழுவி 10 நிமிடம் ஊறவைக்கவும்.
கடாயில் நெய்+எண்ணெய் ஊற்றி தாளிக்கயுள்ளதை தாளிக்கவும்.
வெங்காயம் பெரியதாக அரிந்து அதையும் சேர்த்து வதக்கவும்.
இஞ்ஞி பூண்டு பேஸ்ட்டும் சேர்த்து வதக்கவும்.
அதில் ஊற வைத்துள்ள அரிசியை தண்ணிர் வடித்துவிட்டு சேர்த்து வதக்கவும்.
இதில் கரம்மசாலா தூள், அரைத்துள்ள தக்காளி பேஸ்ட், தேங்காய பால் எல்லாம் சேர்த்து
நன்றாக கலந்து தேவையான அளவு உப்பையும் சேர்த்து குக்கரில்(1:2)தண்ணிர் வைத்து 1 விசில் வைத்தெடுக்கவும்.
ரைஸ் குக்கர் என்றால்
தண்ணிர் - 1 கப்
தேங்காய பால் - 1/2 கப்
என்ற விகிதத்தில் வைக்கவும்.
சுவையான தக்காளி பிரியாணி நல்ல ஆறியதும் மேலே கொஞ்சம் நெய் ஊற்றி கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்.
வெங்காயம் ரைத்தா, வெள்ளரி ரைத்தா சேர்த்து சாப்பிடலாம்.
