தேவையானவை
கத்தரிக்காய் - 3 சின்னது
தக்காளி - 2
வெங்காயம் - 1
புளி - நெல்லிகாய் அளவு
பூண்டு - 4 பல்
கறிவேப்பிலை - கொஞ்சம்
மஞ்சள் தூள் - 1/4 தே.க
மிளகாய் தூள் - 1 தே.க
தனியா தூள் - 1 தே.க
தாளிக்க
----------
எண்ணெய் - 1 தே.க
எண்ணெய் - 1 தே.க
கடுகு - 1/2 தே.க
வெந்தயம் - 1/4 தே.க
மசாலா அரைக்க
தேங்கய் துறுவல் - 2 தே.க
சோம்பு - 1/4 தே.க
மிளகு - 1/4 தே.க
கசகசா - 1/2 தே.க
முந்திரி பருப்பு - 4
பட்டை - சிறு துண்டு
சீரகம் - 1/4 தே.க
செய்முறை
-------------
வெங்காயம் தக்காளியை நறுக்கவும்.
புளியை ஊறவைக்கவும்.
கத்தரிக்காயை நல்ல பெரிய துண்டங்களாக நறுக்கவும்.
பூண்டை தோல் உரித்து தட்டி வைக்கவும்.
மசாலா சாமன்களை அரைக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்கயுள்ளதை போட்டு தாளிக்கவும்.வெங்காயம், தக்காளி சேர்த்து
மசாலா சாமன்களை அரைக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்கயுள்ளதை போட்டு தாளிக்கவும்.வெங்காயம், தக்காளி சேர்த்து
ஐந்து நிமிடம் வதக்கவும்.
கத்தரிக்கயை சேர்த்து, மஞ்சள் தூள்,தனியா தூள்,
மிளகாய் தூள் போட்டு வதக்கவும்.
நல்ல வதங்கிய பின் புளி தண்னிர், உப்பு சேர்த்து
மேலும் பத்து நிமிடம் வதக்கவும்.
கத்தரிக்கயை நல்ல வெந்ததும் அரத்துள்ள மசாலாவை சேர்த்து
பத்து நிமிடம் கொதிக்க வைக்கவும்.
நல்ல கொதித்து கொஞ்சம் கெட்டியாகி எண்ணெய் மிதந்து வரும் போது கறிவேப்பிலை போட்டு இறக்கவும்.
இது சாதம்,தோசை,இட்லி எல்லாவற்றிற்கும் நல்லா இருக்கும்.
இது சாதம்,தோசை,இட்லி எல்லாவற்றிற்கும் நல்லா இருக்கும்.
இந்த காரகுழம்பு செட்டிநாடு தோழியிடம் நான் கற்றது. நல்ல டேஸ்டியாகவும்
மேலும் மேலும் செய்து சாப்பிட தூண்டும்.
9 comments:
paarkave nalla irukku, dhinamum ivalavu epdi samaikringa viji?
ama enna yaaru nu theriliya?
ரொம்ப நல்லா இருக்கு செட்டிநாடு காரகுழம்பு விஜி, கத்திரிக்கு பதில் முருங்கை போடலாமா?
hai viji nice to see ur blog recepies are very nice
காரக்குழம்பு வாசம் இங்கு வரை அடிக்குது
என்ன பொற்கொடி உங்களை போய் தெரியுமா என்று கேட்டிங்க. ஹேமா என்றால் பொற்கொடி என்பது நன்றாகவே தெரியும். இது ரொம்ப சிம்பிள் சமையல் ஹேமா. வாங்க வீட்டுக்கு சமைச்சு அசத்திடலாம்.
சிநேகிதி வருகைக்கு நன்றி. நல்ல பேர் பாயீஜா. முருங்கை, வெங்காயம் மட்டும் போட்டும் செய்யலாம். ரொம்ப நன்றாக இருக்கும், தோசைக்கு சுப்பர் பாயிஜா.
ஜலீ ஆமாம் சமைக்கும் போது வீட்டில் இருப்பவர்கள் எல்லாம் என்னோட தோழி+ அவங்க கணவர் என்னிடம் கேட்பாங்க சமையல் ஆயிடுச்சா என்று ரொம்ப பசிக்குது.
வாசனை தூக்குது. என்னோட ஸ்டுடன்ஸ் எல்லாம் கூட இப்படி பசியை தூண்ட விடறிங்க என்று சொல்வாஙக் ஜலீ.
சாருசிராஜ் வருக்கைக்கு நன்றி. வாங்க அடிக்கடி.
ம்ம்..சூப்பர் குழம்பு! கலக்குங்க விஜி! :)
Post a Comment