பீஸ்
காரட்
பீன்ஸ்
கார்ன்
வெங்காயம்
புதினா
பூண்டு
செலரி இலை
தண்ணிர் - 4 கப்
எல்ல காய்க்ளும் சேர்த்து பொடியாக நறுக்கியது 1/2 கப்
பால் - 1 கப்
கார்ன் மாவு - 1 தே.க
அஜிமோமோட்டோ - 1/4 தே.க
மிளகு தூள் - 1/4 தே.க
உப்பு - தேவைகேற்ப்ப
செய்முறை
இதை மைக்ரோவேவிலும் செய்யலாம். மைக்ரோவேவில் பத்து நிமிடத்தில் வைத்து செய்யவும்.(அவரவர் மைக்ரோவேவின் பவரை பொறுத்து வைக்கவும்.)
எல்லா காய்களையும், உப்பையும் சேர்த்து 4 கப் தண்ணிரில் வேக வைக்கவும்.
வெந்ததும் இஞ்ஞி பூண்டு பேஸ்ட், அஜினோமோட்டோ சேர்த்து மேலும் ஐந்து
நிமிடங்கள் வேகவைக்கவும்.
பாலில் கான்ர்ஃப்ளாரை கரைத்து வெந்த காய்களுடன் சேர்க்கவும்.
மீண்டும் ஐந்து நிமிடங்கள் கொதித்ததும் இறக்கி )ரொம்ப கெட்டியாக இல்லாமல் ஊற்றி குடிப்பது போல் ) இருக்கும் போது எடுத்து மிளகுதூள் தூவி பரிமாறவும்.
விரும்பினால் ப்ரையம்ஸ், பொரித்த ரொட்டி துண்டுகள் அல்லது வேகவைத்த
பாஸ்தாவுடன் சாப்பிடலாம்.
இது குழந்தைகள் முதல் பெரியவரை எல்லாரும் குடிக்கலாம்.
பார்ட்டி கெட் டு கெதர் போன்ற இடத்திற்க்கும் ஆப்டைசரோட இது குடுக்கலாம்.
குளி, மழை, காய்ச்சல், சளி தொல்லை போன்ற எல்லாவற்றிற்க்கும் ஏற்றது.
4 comments:
பார்த்தவுடனே செய்து விடவேண்டும் போல் உள்ள குறிப்பையும்,படத்தையும் தந்த விஜிக்கு வாழ்த்துக்கள்!
விஜி சூப் சூப்பர்..
வாவ் குளிருக்கு இதமான வெஜ் சூப் அருமை விஜி.
ஸாதிகா அக்கா நன்றி. இது ரொம்ப சிம்பிள் +வேகமா செய்து சாப்பிடலாம்.
சிநேகிதி வாங்க நன்றி.
ஜலீ ஆமாம் கரெக்டா சொன்னிங்க. எங்க வீட்டு விருந்தாளிங்க எப்ப வந்தாலும் விஜி வெஜ் சூப்பர் ரெடியா வையுங்க வந்துட்டே இருக்கோம் என்று சொல்லிட்டு தான் வீட்டுக்கு வருவாங்க.
Post a Comment