Friday, February 26, 2010

வெஜ் மன்ஜுரியன்(சைனிஸ்)







தேவையானவை
---------------------

கேபேஜ் - 2
கேரட் - 1
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 1
பூண்டு - 2
கார்ன் ஸ்ரார்ச் - 1 தே.க
மைதா - 4 தே.க
சர்க்கரை - 1 தே.க
உப்பு - தேவைகேற்ப்ப
மிளகு தூள் - தேவைகேற்ப்ப
எண்ணெய் - பொரிக்க

க்ரேவி
-------
இஞ்ஞி
பூண்டுபேஸ்ட் - 1 தே.க
வெஜிடெபிள் ஸ்டாக் - 1 கப்
சோயா சாஸ் -1/4 கப்

செய்முறை
-------------

வெங்காயம், கேரட், கேபேஜ் எல்லாவற்றையும் நல்ல துருவி கொள்ளவும்.
பச்சை மி்ளகாய் பொடியாக அரியவும்.
பூண்டு பொடியாக அரியவும்.
ஒரு பாத்திரத்தில் அரிந்த காயகறிகள்,உப்பு எல்லாவற்றையும்
சேர்த்து நன்றாக கலந்து மிளகு துள்,மைதா,கார்ன்மாவு,எல்லாவற்றையும்
சேர்த்து நன்றாக பிசிறி சின்ன உருண்டைகளாக பிடித்து எண்ணெயில் போட்டு பொரிக்கவும்.

க்ரேவிக்கு
------------
கடாயில் எண்ணெய் விட்டு அதில் இஞ்ஞி,பூண்டு,பச்சைமிளகாய் போட்டு வதக்கி சோயாசாஸ்,சர்க்கரை,கார்ன்மாவு வெஜிடெபிள் ஸ்டாக் இல்லை என்றால் (தண்ணிரில் கார்ன் மாவை கரைத்து பேஸ்ட்) போல் கலந்து அதை கடாயில் விட்டு உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.
நன்றாக க்ரேவி கெட்டியாகி வரும் போது எடுத்து விடவும்.
ம்ன்சூரியனை ஒரு தட்டில் வைத்து அதன் மேல் க்ரேவியை விட்டு பறிமாறவும்.
வெங்காய தாள் தூவி அலங்கரிக்கவும்.

நூடில்ஸ், வெஜ் ப்ரைட் ரைஸ் இதனுடன் சேர்த்து சாப்பிட நன்றாக இருக்கும்.

Wednesday, February 24, 2010

மைக்ரோவேவ் மில்க் பேடா












தேவையானவை

பால் பௌடர் - 2 கப்
கண்டென்ஸ்ட் பால் - 1 டின்
வெண்ணைய் - (4 oz) 8 tbsp
ஏல தூள் - 1/2 தே.க
உலர் பருப்புகள் - 1/2 தே.க(முந்திரி,பிஸ்தா)


செய்முறை
----------
பட்டரை மைக்ரோவேவ் பாத்திரத்தில் போட்டு உருக்கவும்.
அதே பாத்திர்த்தில் பால் பௌடர், கண்டென்ஸ்ட் பால் எல்லாவற்றையும்
சேர்த்து நன்றாக கலந்து மைக்ரோவேவில் மொத்தம் வைக்கவேண்டிய நேரம் 3 நிமிடம் அதை 3 ஆக பிரித்து வைத்து எடுக்கவும்.

முதலில்1 நிமிடம் வைக்கவும்..

மீண்டும் எடுத்து நன்றாக கலந்து 1 நிமிடம் வைக்கவும்.

மீண்டும் எடுத்து நன்றாக கலந்து மைக்ரோவேவில் 1 நிமிடம் வைக்கவும்
சூடு ஆறிய பின் சின்ன உருண்டை கலவை எடுத்து உள்ளங்கையில்
வைத்து நன்றாக வட்டமாக செய்து நடுவில் லேசாக அழுத்தவும்.
விரும்பினால். பிஸ்தா, முந்திரி வைத்து மஃபின் கப், குக்கீ கப்ஸில் வைத்து அலங்கரித்து பரிமாறலாம்.

குறிப்பு: மைக்ரோவேவின் பவரை பொறுத்து கூட்டியோ குறைத்தோ வைக்கவும்

Saturday, February 20, 2010

பாவ் பாஜி மசாலா







தேவையானவை



உருளை கிழங்கு - 2
வெங்காயம் - 1
தக்காளி - 1
பட்டாணி(க்ரின் பீஸ் - 1/4 கப்
கேரட் - 2
க்ஃலிப்ளவர் - 1/2 கப்(நறுக்கியது)
இஞ்ஞி & பூண்டு பேஸ்ட் - 1/2 தே.க
கொத்தமல்லி இலை - 1/2 தே.க
உப்பு - தேவைகேற்ப்ப
பாவ் ப்ரட் - 4
பட்டர் - 1 துண்டு
லெமன் - வெட்டிய துண்டுகள்
வெங்காயம்


செய்முறை


உருளை கிழங்கு,கஃலிப்ளவர்,கேரட்,பீஸ், எல்லாவற்றையும் துண்டுகாளாக்கி உப்பு சேர்த்து குக்கரில் ஒரு விசில் வைத்து வேகவைக்கவும்.
கடாயில் நெய்+எண்ணெய் விட்டு வெங்காயம், தக்காளி, இஞ்ஞி பூண்டு பேஸ்ட் சேர்த்து ஐந்து நிமிடம் வதக்கிய பின் பாவ் பாஜி
மசாலா சேர்த்து வேக வைத்துள்ள காயயையும் சேர்த்து நன்றாக கலக்கி கொஞ்சம் தண்ணிர் சேர்த்து ஐந்து நிமிடம் வேகவைக்கவும்.
நனறாக மாஷரால் மாஷ் செய்து கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்.
தவாவில் கொஞ்சம் பட்டர் போட்டு அதில் பாவ துண்டுகளை தேய்த்து பாவ் லைட்டா ப்ரவுனாக மாறும் போது எடுத்து லெமன் துண்டுகள்+ பாஜியோட பரிமாறவும்.




Thursday, February 18, 2010

மாலாடு(பொட்டுகடலை லட்டு)















தேவையானவை
-------------------

பொட்டு கடலை - 1 கப்
சர்க்க்ரை - 1 கப்
நெய் - 1/4 கப்
முந்திரி பருப்பு - 5 உடைத்தது
ஏலத்துள் - 1 தே.க

செய்முறை
-------------
எளிதில் செய்ய கூடிய இனிப்பு.
பொட்டுகடலை, சர்க்க்ரையை நன்றாக பொடிக்கவும்.
கடாயில் நெய்யை விட்டு நல்ல சூடானதும் முந்திரியை பொன்நிறமாக வறுத்து எடுக்கவும்.
மீதமுள்ளா நெய்யில் பொட்டுகடலை+சர்க்க்ரை போட்டு நன்றாக கலக்கவும்.நல்ல வாசனை வரும்போது எடுத்து அதில் முந்திரி சேர்த்து
நன்றாக கலந்து கை பொறுக்கும் சூட்டில் உருண்டைகளாக பிடிக்கவும்
நல்ல ப்ரோட்டின் அடங்கியுள்ள இனிப்பு.

Friday, February 12, 2010

வெஜ் சூப்






தேவையானவை
பீஸ்
காரட்
பீன்ஸ்
கார்ன்
வெங்காயம்
புதினா
பூண்டு
செலரி இலை
தண்ணிர் - 4 கப்
எல்ல காய்க்ளும் சேர்த்து பொடியாக நறுக்கியது 1/2 கப்
பால் - 1 கப்
கார்ன் மாவு - 1 தே.க
அஜிமோமோட்டோ - 1/4 தே.க
மிளகு தூள் - 1/4 தே.க
உப்பு - தேவைகேற்ப்ப
செய்முறை
இதை மைக்ரோவேவிலும் செய்யலாம். மைக்ரோவேவில் பத்து நிமிடத்தில் வைத்து செய்யவும்.(அவரவர் மைக்ரோவேவின் பவரை பொறுத்து வைக்கவும்.)
எல்லா காய்களையும், உப்பையும் சேர்த்து 4 கப் தண்ணிரில் வேக வைக்கவும்.
வெந்ததும் இஞ்ஞி பூண்டு பேஸ்ட், அஜினோமோட்டோ சேர்த்து மேலும் ஐந்து
நிமிடங்கள் வேகவைக்கவும்.
பாலில் கான்ர்ஃப்ளாரை கரைத்து வெந்த காய்களுடன் சேர்க்கவும்.
மீண்டும் ஐந்து நிமிடங்கள் கொதித்ததும் இறக்கி )ரொம்ப கெட்டியாக இல்லாமல் ஊற்றி குடிப்பது போல் ) இருக்கும் போது எடுத்து மிளகுதூள் தூவி பரிமாறவும்.
விரும்பினால் ப்ரையம்ஸ், பொரித்த ரொட்டி துண்டுகள் அல்லது வேகவைத்த
பாஸ்தாவுடன் சாப்பிடலாம்.
இது குழந்தைகள் முதல் பெரியவரை எல்லாரும் குடிக்கலாம்.
பார்ட்டி கெட் டு கெதர் போன்ற இடத்திற்க்கும் ஆப்டைசரோட இது குடுக்கலாம்.
குளி, மழை, காய்ச்சல், சளி தொல்லை போன்ற எல்லாவற்றிற்க்கும் ஏற்றது.

Tuesday, February 9, 2010

கத்தரிக்காய் காரகுழம்பு


















தேவையானவை
---------------------

கத்தரிக்காய் - 3 சின்னது
தக்காளி - 2
வெங்காயம் - 1
புளி - நெல்லிகாய் அளவு
பூண்டு - 4 பல்
கறிவேப்பிலை - கொஞ்சம்
மஞ்சள் தூள் - 1/4 தே.க
மிளகாய் தூள் - 1 தே.க
தனியா தூள் - 1 தே.க



தாளிக்க
----------
எண்ணெய் - 1 தே.க
கடுகு - 1/2 தே.க
வெந்தயம் - 1/4 தே.க



மசாலா அரைக்க

தேங்கய் துறுவல் - 2 தே.க
சோம்பு - 1/4 தே.க
மிளகு - 1/4 தே.க
கசகசா - 1/2 தே.க
முந்திரி பருப்பு - 4
பட்டை - சிறு துண்டு
சீரகம் - 1/4 தே.க


செய்முறை

-------------

வெங்காயம் தக்காளியை நறுக்கவும்.

புளியை ஊறவைக்கவும்.

கத்தரிக்காயை நல்ல பெரிய துண்டங்களாக நறுக்கவும்.
பூண்டை தோல் உரித்து தட்டி வைக்கவும்.
மசாலா சாமன்களை அரைக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்கயுள்ளதை போட்டு தாளிக்கவும்.வெங்காயம், தக்காளி சேர்த்து
ஐந்து நிமிடம் வதக்கவும்.
கத்தரிக்கயை சேர்த்து, மஞ்சள் தூள்,தனியா தூள்,
மிளகாய் தூள் போட்டு வதக்கவும்.
நல்ல வதங்கிய பின் புளி தண்னிர், உப்பு சேர்த்து
மேலும் பத்து நிமிடம் வதக்கவும்.
கத்தரிக்கயை நல்ல வெந்ததும் அரத்துள்ள மசாலாவை சேர்த்து
பத்து நிமிடம் கொதிக்க வைக்கவும்.
நல்ல கொதித்து கொஞ்சம் கெட்டியாகி எண்ணெய் மிதந்து வரும் போது கறிவேப்பிலை போட்டு இறக்கவும்.
இது சாதம்,தோசை,இட்லி எல்லாவற்றிற்கும் நல்லா இருக்கும்.
இந்த காரகுழம்பு செட்டிநாடு தோழியிடம் நான் கற்றது. நல்ல டேஸ்டியாகவும்
மேலும் மேலும் செய்து சாப்பிட தூண்டும்.

கேப்சிகம் துவையல்



கேப்சிகம் - 1


பச்சை மிள்காய் - 1


புளி - நெல்லிகாய் அளவு


உப்பு - தேவகேற்ப்ப


உளுந்தம் பருப்பு - 1 தே.க


கடலை பருப்பு - 1 தே.க


எண்ணெய் - 1 தே.க


பெருங்காய தூள் - 1/2 தே.க



செய்முறை



காப்சிகத்தை சின்ன துண்டுகளாக்கவும்.


கடாயில் எண்னெய் விட்டு சூடானதும் பருப்புகள், மிளகாய், புளி போட்டு வறுக்கவும்.


கடைசியாக காப்சிகம் துண்டுகள் போட்டு நன்றாக வதக்கவும்.


சூடு ஆறியதும் மிக்ஸியில் போட்டு ரவை பதத்தில் அரைதெடுக்கவும்.


இது சாததிற்க்கும், தோசைக்கும் நன்றாக இருக்கும்.
சிகப்பு கேப்சிகமும் உபயோகிக்கலாம்.

Monday, February 8, 2010

கேழ்வரகு மாவு லாடு (Ragi Laddu)
















தேவையானவை
----------------------
ராகி மாவு வறுத்தது - 1 கப்
சர்க்கரை - 1 கப்
நெய் - 1/4 கப்
ஏலத்துள் - 1/4 தே.க
முந்திரி பருப்பு - 4
சூடான பால் - 2 தே.க
செய்முறை
-------------
நான்ஸ்டிக் கடாயில் கொஞ்சம் நெய் விட்டு அதில் முந்திரியை வறுக்கவும்.
அதே கடாயில் ராகி மாவை போட்டு மிதமான தீயில் நல்ல பச்சை வாசனை போக வறுக்கவும்.
சூடு ஆறியபின் அதில் சர்க்க்ரை, ஏலத்துள், பால் சேர்த்து நல்ல கலக்கவும்.
லாடு பிடிக்கும் முன் கையில் கொஞ்சம் நெய் தடவி லாடுகளை பிடிக்கவும்.
இதை ப்ரிட்ஜில் வைத்து ஒரு வாரம் வரை சப்பிடலாம்.
ஹெல்தி இனிப்பு.



Friday, February 5, 2010

பாவக்காய் உருளை தீயல்









தேவையானவை
--------------------
பாவக்காய் - 2
உருளை - 2
வெங்காயம் - 1
தக்காளி - 2

தாளிக்க
-----------
எண்ணெய் - 1 தே
கடுகு - 1/2 தே.க
மிளகாய் வற்றல் - 2
கறிவேப்பிலை - 2 இணுக்கு
தீயல் பொடி
----------------
மிளகாய் வற்றல் - 5
தனியா - 1 தே.க
மிளகு - 1/2 தே.க
கறிவேப்பிலை - 4 இணுக்கு
மஞ்சள் தூள் - 1/2 தே.க
தேங்காய துருவல் - 1/2 கப்

புளியை தண்னிரியில் ஊற வைக்கவும்.
பாவக்காய், உருளை இரண்டையும் அரை இன்ஞ் நீளத்தில் நறுக்கவும், வெங்காயம், தக்காளி இரண்டையும் துண்டுகளாக்கவும்.
கடாயில் தேங்காய தவிர மற்ற எல்லாவற்றையும் எண்ணெய் விடாமல் நல்ல சிவப்பாக வறுக்கவும்.
சூடு ஆறிய பின் பொடிக்கவும்.
கடாயில் கொஞ்சம் எண்ணெய் விட்டு வெங்காயம், தக்காளி போட்டு வத்ங்கிய பின் நறுக்கிய பாவக்காய், உருளை சேர்த்து வதக்கவும்.
பச்சை வாசனை போனதும் புளி தண்னிர், உப்பு,
மஞ்சள் தூள் சேர்த்து மேலும் பத்து நிமிடம் வதக்கவும்.
நல்ல வதங்கிய பின் தீயல் பொடியை சேர்த்து மேலும் கொஞ்சம் தண்ணிர் சேர்த்து கொதிக்க விடவும்.
நல்ல கெட்டியானதும் தாளிக்கயுள்ளதை தாளித்து போடவும்.
கறிவேப்பிலை போட்டு இறக்கவும்.
சூடு சாததிற்க்கு நல்ல காம்பினேஷன்.
இதே போல் சின்ன வெங்காயம். சேனை, வழுதலங்காய்,கத்தரிக்காய் ,முருங்கைகாய், போன்றவற்றிலும் செய்யலாம்.

Monday, February 1, 2010

மைசூர் ரசம்














தேவையானவை

தக்காளி - 1
புளி - சிறிய நெல்லிகாய் அளவு
துவரம் பருப்பு - 1/2 கப்
எண்ணெய் - 1 தே.க
நெய் - 1/2 தே.க
கறிவேப்பிலை - கொஞ்சம்
கொத்தமல்லி இலை - கொஞ்சம்
மஞ்சள் தூள் - 1/2 தே.க
உப்பு - தேவகேற்ப்ப


ரசப்பொடி தயாரிக்க
------------------

துவரம் பருப்பு - 1/2 தே.க
மிளகு - 1/2 தே.க
தனியா - 1/2 தே.க
மிளகாய் வற்றல் - 2

சீரகம் வறுக்காமல் பொடிக்கும் போது சேர்த்து பொடிக்கவும்.

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி பொடிள்ளதை போட்டு
நல்ல சிவக்க வறுக்கவும்.
சூடு ஆறிய பின் அதை பொடிக்கவும்.
துவரம்பருப்பை நல்ல வேகவைக்கவும்.
புளியை தண்ணிரில் ஊற வைக்கவும்.
தக்காளியை துண்டுகளாக்கி வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் கொஞ்சம் எண்ணெய் விட்டு முதலில் தக்காளி
கொஞ்சம் கொத்தமல்லி இலை போட்டு வதக்கவும்.
வதங்கிய பின் புளி தண்ணிர்,உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து நல்ல கொதிக்க வைக்கவும்.
கொதித்தபின் வெந்த துவரம் பருப்பை சேர்த்து
பொடியையும் சேர்த்து நல்ல பச்சை வாசனை போக கொதிக்க விடவும்.

நல்ல வாசனோயோடு மைசூர் ரசம் ரெடி.
ஒரு சின்ன கரண்டியில் கொஞ்சம் நெய் ஊற்றி அதில் கடுகு,
சீரகம் போட்டுதாளித்து, கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை போட்டு இறக்கி வைக்கவும்.
மைசூர் ரசத்தில் சில பேர் துறுவிய தேங்காயையும் வறுத்து சேர்ப்பார்கள்.