தேவையானவை
தக்காளி - 1
புளி - சிறிய நெல்லிகாய் அளவு
துவரம் பருப்பு - 1/2 கப்
எண்ணெய் - 1 தே.க
நெய் - 1/2 தே.க
கறிவேப்பிலை - கொஞ்சம்
கொத்தமல்லி இலை - கொஞ்சம்
மஞ்சள் தூள் - 1/2 தே.க
உப்பு - தேவகேற்ப்ப
ரசப்பொடி தயாரிக்க
------------------
துவரம் பருப்பு - 1/2 தே.க
மிளகு - 1/2 தே.க
தனியா - 1/2 தே.க
மிளகாய் வற்றல் - 2
சீரகம் வறுக்காமல் பொடிக்கும் போது சேர்த்து பொடிக்கவும்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி பொடிள்ளதை போட்டு
நல்ல சிவக்க வறுக்கவும்.
சூடு ஆறிய பின் அதை பொடிக்கவும்.
துவரம்பருப்பை நல்ல வேகவைக்கவும்.
புளியை தண்ணிரில் ஊற வைக்கவும்.
தக்காளியை துண்டுகளாக்கி வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் கொஞ்சம் எண்ணெய் விட்டு முதலில் தக்காளி
கொஞ்சம் கொத்தமல்லி இலை போட்டு வதக்கவும்.
வதங்கிய பின் புளி தண்ணிர்,உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து நல்ல கொதிக்க வைக்கவும்.
கொதித்தபின் வெந்த துவரம் பருப்பை சேர்த்து
பொடியையும் சேர்த்து நல்ல பச்சை வாசனை போக கொதிக்க விடவும்.
நல்ல வாசனோயோடு மைசூர் ரசம் ரெடி.
ஒரு சின்ன கரண்டியில் கொஞ்சம் நெய் ஊற்றி அதில் கடுகு,
சீரகம் போட்டுதாளித்து, கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை போட்டு இறக்கி வைக்கவும்.
மைசூர் ரசத்தில் சில பேர் துறுவிய தேங்காயையும் வறுத்து சேர்ப்பார்கள்.
15 comments:
ஆ விஜி ஆவி பறக்க மைசூர் ரசம், அப்படியே ஊற்றி குடித்து விட வேண்டியது தான்
மைசூர் ரசம் சூப்பரா இருக்கு
எனக்கு ரொம்ப பிடித்த ரசம் இது.நினைபடுத்திட்டீங்க.உங்க ரசத்தை பார்க்கும் போது நாக்குல நாவூறுது விஜி....
சூப்பரா இருக்கு!!
வாவ் மைசூர் ரசம் சூப்பராக இருக்கு
மிகவும் அருமை. அப்படியே இரண்டு கிளாஸ் ஊற்றிக் குடிக்கலாம் போல இருக்கு. ஆமா மைசூர் காரர்கள் இரசத்தில் வெல்லம் அல்லது சக்கரை போடுவார்களாமே அது உண்மையா?
viji, neenga blog panringa nu sollave illiye! nyayama idhu? :) punishment ennana sooda oru mysore rasam anuppi vainga :D
Mysore rasam super
Mysore Rasam Super
Nice Rasam Viji!
ஜலீ ஆவீ பறக்க் ரசம். வாங்க நிறய்ய விதம் விதமா ரசம் செய்து சாப்பிடலாம்.
அண்னாமலையான் நன்றி.
ஆமாம் மேனகா எனக்கும் ரொம்ப பிடிக்கும்.
சுவையான சுவை வருகைக்கு நன்றி.
பாயிஜா நன்றி
பித்தனின் வாக்கு. முதன் முதலில் வந்திருக்கிங்க. நன்றி. ஆமாம் நிங்க சொல்வது சரியே. உங்க வாக்கு தப்பில்லாமல் இருக்குமா.
எனக்கு சர்க்கரை சேர்த்தால் பிடிக்காது. வெல்லம் சேர்ப்பாங்க. சாம்பரிலும் சேர்ப்பாங்க. சிலபேர் தேங்காய் துருவி சேர்ப்பாங்க.
பொற்க்கொடி என்ன கோபிக்காதிங்க. உங்களுக்கு ரசம் என்ன நல்ல ஸ்விட்டோட அனுப்பி வைக்கிறேன். வாங்க அடிக்கடி வாங்க.சொல்லாமலே வந்திங்க அது தான் உண்மையிலேயே சொல்லனும் என்றால் நிங்க தான் டாப்பில் இருக்கிங்க.என் தோழி என்பதை நிருபித்திட்டிங்க. நன்றி பொற்கொடி.
மகி வாங்க. ஆமாம் மைசூர் ரசம் என்றால் எனக்கும் ரொம்ப பிடிக்கும். வெல்லம் போடாமல் நான் செய்வேன். வெல்லம் போட்டால் ஒரிஜினல் மைசூர் ரசம்.
வணக்கம்...
உங்களின் இந்தப் பகிர்வு வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/06/blog-post_23.html) சென்று பார்க்கவும்... நன்றி...
http://blogintamil.blogspot.ae/2013/06/blog-post_23.html
வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன்.அருமை.பகிர்வுக்கு நன்றி.
Post a Comment