தேவையானவை
கடலை பருப்பு - 1 கப்
வற்றல் மிளகாய் - 3
வெங்காயம் - 1 பொடியாக அரிந்தது
உப்பு - தேவைகேற்ப்ப
கறிவேப்பிலை - கொஞ்சம்
இஞ்ஞி - 1/4 தே.க துறுவியது
செய்முறை
பருப்பை 1 மணிநேரம் ஊறவைக்கவும்.
தண்னிரை வடியவிட்டு வற்றல் மிளகாய்,உப்பு சேர்த்து
ஒன்றிரண்டாக அரைத்தெடுக்கவும.
நறுக்கிய இன்ஞி,வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து நன்றாக
கலந்து சின்ன சின்ன வடைகளாக தட்டி எண்ணெயில் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.
தேங்காய சட்ணியோட சாப்பிட நன்றாக இருக்கும்.
இதே வடையை ரசத்தில் போட்டு ரசவடையாகவும்,
சாம்பாரில் போட்டு சாம்பார் வடையாக சாப்பிட நன்றாக இருக்கும்.
4 comments:
விஜி..காலங்காத்தாலே வடையை ஞாபகபடுத்திவிட்டீர்களே!குறிப்பும்,படமும் அருமை.கடலைபருப்பை விட பட்டாணிபருப்பில் செய்தால் இன்னும் சுவையாக இருக்கும்.ஆனால் எல்லா ஊர்களிலும் இது கிடைக்காது.அடுத்த முறை சென்னை வரும்பொழுது பட்டாணிபருப்பு வாங்கிச்சென்று செய்துபாருங்க்ள்.அப்புறம் வடை சாப்பிடும் பொழுதெல்லாம் ஸாதிகாஅக்கா நினைப்பு கட்டாயம் வரும்.
ஆமாம் சரியா சொன்னிங்க. என் மாமியார் வீட்டில் ஒரு தடவை பட்டாணி பருப்பில் செய்தாங்க சாப்பிட்டேன் நிங்க சொல்வது அதன் வடை ருசி இப்பவும் இருக்கு. அவசியம் அடுத்த தடவை + இங்கே வேற ஏதாவது கிடையில் இருக்கா என்று தேடி வாங்கி செய்கிறேன்.அவசியம் உங்க நினைப்பு வரும்.நன்றி ஸாதிகா
super vadai. i do it with pattani paruppu only.here you can get it as SPLIT YELLOW DAL.
ஆஹா!!! பருப்புவடை..
//கடலைபருப்பை விட பட்டாணிபருப்பில் செய்தால் இன்னும் சுவையாக இருக்கும்.//
உண்மைதான். அரைக்கும்போதே வாசனை மூக்கைத்துளைக்கும். வடை செய்தபின்னோ நிமிடத்தில் தட்டு காலியாகிடும். சாம்பார்,ரசவடைகளுக்கென்று தனியாக செய்தால்தான் உண்டு :-))
Post a Comment