Sunday, March 7, 2010

சில்லி பன்னிர்







தேவையானவை
---------------

குடைமிளகாய் - 2
உருளைக்கிழங்கு - ஒன்று
பட்டாணி - அரை கப்
வெங்காயம் - ஒன்று
தக்காளி - ஒன்று
பனீர் துண்டுகள் - ஒரு கப்
இஞ்சி விழுது - கால் தேக்கரண்டி
பூண்டு - கால் தேக்கரண்டி
எண்ணெய் - ஒரு தேக்கரண்டி
நெய் - கால் தேக்கரண்டி
கரம் மசாலா - அரை தேக்கரண்டி
தண்ணீர் - ஒரு கப்
கொத்தமல்லி இலை - சிறிது

அரைக்க
--------

வெங்காயம்
தக்காளி
இஞ்சி
பூண்டு

மசாலா
---------

மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
தனியா தூள் - அரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
சீரகத்தூள் - கால் தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை


பனீரை வறுத்து வைத்துக் கொள்ளவும்.
வெங்காயத்தை துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
குடைமிளகாய் மற்றும் உருளைக்கிழங்கை சிறு சிறுத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்
அரைக்க கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி அரைத்த விழுதை ஊற்றி பச்சை வாசனை போகும் வரை தீயை மிதமாக வைத்து வதக்கவும். அதில் மசாலா தூள் வகைகளை சேர்த்து வதக்கவும்
அதன் பிறகு அதில் நறுக்கி வைத்திருக்கும் குடைமிளகாய் மற்றும் உருளைக்கிழங்கை சேர்த்து கிளறி விடவும்
அதில் உப்பு போட்டு தண்ணீர் ஊற்றி நன்கு கிளறி விட்டு வேக விடவும். விருப்பப்பட்டால் பட்டாணியும் சேர்த்து செய்யலாம்.
வறுத்த பனீர் துண்டுகளை போட்டு நன்றாக ஒரு முறை கிளறி மேலும் ஐந்து நிமிடம் வேக விடவும்.
கலவை நன்கு கெட்டியாக வந்தவுடன் இறக்கி மற்றொரு பாத்திரத்தில் மாற்றி மேலே கொத்தமல்லி தழை தூவி அலங்கரிக்கவும். சுவையான சில்லி பனீர் ரெடி. இதை நெய் சாதம், பூரி, பரோட்டா, ரொட்டி ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிடலாம்.

4 comments:

பித்தனின் வாக்கு said...

ரொம்ப நல்லா இருக்குங்க. பார்க்க அருமையா இருக்கு. ஏனுங்க அம்மினி, கூட ரெண்டு சப்பாத்தி அல்லது இந்த நாண் சொல்லி ஒரு வறட்டு ரொட்டிப் படம் போட்டு இருந்தீங்கன்னா, நான் படத்தைப் பார்த்தே கொஞ்சம் பசியாறிப்போம் இல்லை. நல்ல பதிவுங்ககோ . நல்ல ரெசிப்பீங்க. ரொம்ப நன்றி அம்மினி.

Mahi said...

நல்லாருக்குங்க விஜி! நான் பனீர் கூட உருளைக் கிழங்கு சேர்த்ததில்லை.

//இதை நெய் சாதம், பூரி, பரோட்டா, ரொட்டி ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிடலாம்.// சொன்ன மாதிரி இதுல ஏதாவது ஒரு ஐட்டமும் வெச்சிருந்தீங்கன்னா சூப்பராஇருந்திருக்கும்! :)

Kanchana Radhakrishnan said...

Good receipe

Vijiskitchencreations said...

பித்தனின் வாக்கு கரெக்ட். பாவம் உங்களுக்காக அடுத்த தடவை போடுகிறேன்.நன்றி.

மஹி.பன்னிடோட இது சேர்த்து சாப்பிட நன்றாக இருக்கும். அடுத்த தடவை அயிட்டத்தோட போடுகிறேன்.
நெய் சாதம், ப்ரைட் ரைஸ், பரோட்டா, ரொட்டி எல்லாதுக்கும் ஏற்ற சைட் டிஷ்.நன்றி மஹி.