Thursday, March 18, 2010

கோக்கனட் லாடு(மில்க்மெய்ட்)


கண்டென்ஸ்ட் மில்க் (மில்க் மெய்ட்) - 1 டப்பா
தேங்காய் துருவல் - 3/4 கப்
பட்ட்ர் அல்லது நெய் - 1/2 தே.க
சர்க்க்ரை - 1/4 தே.க
ஏலத்தூள் - 1/4 தே.க

செய்முறை

ஒரு கனமான பாத்திரம் அல்லது நான்ஸ்டிக் கடாய் வைத்து அடுப்பை மிடியமாக வைத்து அதில் கொஞ்சம் பட்டர் விட்டு மில்க்மெய்டை ஊற்றி அதை நல்ல கிளறி விடவும்.
பாத்திரத்தின் ஒரத்தில் ஒட்டாமல் வரும் போது தேங்காய் துருவல்,ஏலத்தூள் சேர்த்து நல்ல கிளறி விட்டு எடுக்கவும்.
ஒரு தட்டில் 2 தே.க தேங்காய் துருவல் போட்டு வைக்கவும்.
மிதமான சூடு இருக்கும் போது கையில் கொஞ்சம் நெய் அல்லது பட்டர் தடவி சின்ன உருண்டைகளாக செய்து அதை தேங்காய் துருவலில் பிரட்டி எடுக்கவும்.
நல்ல டேஸ்டியான ரிச் மில்க்மெய்ட் கோக்கனட் லாடு ரெடி.
எல்லாரும் விரும்பி 1 லாடுக்கு பதிலாக 3 லாடு எடுத்து சாப்பிடுவார்கள்.
இது செய்வது ரொம்ப ரொம்ப சிம்பிள் மொத்தமே 10 நிமிடம் தேவை.
இதில் பால் பௌடர் சேர்த்தும் செய்யலாம்.
நான் இதை ஒரு கெட் டு கெதர் பார்டிக்கு எடுத்து சென்றேன்.எல்லாமே காலியாகிட்டது.