Friday, March 19, 2010

எரிசேரி








இது கேரளாவில் செய்யகூடிய ஒரு கூட்டு.

தேவையானவை

சேனை துண்டுகளாக்கியது - 1/2 கப்
வாழக்காய் துண்டுகளாக்கியது - 1/2 கப்

மசாலா
------------

தேங்காய துருவியது - 1/2 கப்
சீரகம் - 1 தே.க
மிளகு - 1/4 தே.க
வற்றல் மிளகாய் - 2


தாளிக்க
------------

தேங்காய எண்ணெய் - 1 தே.க
கடுகு - 1/2 தே.க
வற்றல் மிளகாய் - 1
பெருங்காய தூள் - 1/4 தே.க
கறிவேப்பிலை - 3 இலைகள்

மேலே தூவ
-------------------
வறுத்த தேங்காய் துருவல் - 1/4 தே.க


செய்முறை
-----------------

வாழைக்காய், சேனை இரண்டும் சேர்த்து தண்ணிர் விட்டு உப்பு சேர்த்து கொதிக்கவைக்கவும்.
கால் தே.க தேங்காய துருவலை வெறும் கடாயில் வறுத்து வைக்கவும்.
மசாலா பொருட்களை அரைத்து வெந்த காய்களோடு சேர்த்து கொதிக்கவிடவும்.
நல்ல பச்சை வாசனை போனதும்,வறுத்த தேங்காய் துருவல்+தாளிக்கயுள்ளதை தாளித்து போட்டு
கொஞ்சம் தேங்காய் எண்ணெய் விட்டு பச்சை கறிவேப்பிலை போட்டு இறக்கவும்.
நல்ல மருத்துவ குணமடங்கிய கூட்டு.
இது சாததிற்க்கு நல்ல சைட்டிஷ்.


4 comments:

Menaga Sathia said...

superr!!

Anonymous said...

பெரிய இவளாட்டம் பேசறாளேனு நினைக்காதீர்கள் பிளீஸ். கொஞ்சம் இதை படியுங்களேன்.http://reap-and-quip.blogspot.com/2010/03/recipe-blogs.html

ஆங்கில சமயல் புளொக்கை விட தரமானதான படங்களை எங்க ஆளுங்கள் குடுக்க வேண்டும் என்ற ஆசையில் எழுதியதே தவிர யார் மனதையும் புண்படுத்தும் நோக்கமில்லை எனக்கு.

அன்புடன் மலிக்கா said...

சூப்பர் விக்கி. அழகாயிருக்கு..

Vijiskitchencreations said...

நன்றி, மேனகா.
நன்றி மல்லிக்கா.
நன்றி.அனாமிகா. முதல் வருகைக்கும் நன்றி.