Tuesday, March 30, 2010

வாழப்பூ பருப்பு உசிலி




தேவையானவை
கடலைபருப்பு - ½ கப்மிளகாய் வற்றல் - 3
தேங்காய துருவல் - 1 தே.கமஞ்சள் தூள் - ½ தே.கபெருங்காயம் - சின்ன துண்டுஉப்பு - தேவைகேற்ப்ப


செய்முறை


வாழைப்பூவைநன்குஆய்ந்துபொடியாகநறுக்கிமோர்+தண்ணிர்,உப்பு,
மஞ்சள் தூள் போட்டு வேக வைக்கவும். (மோர் சேர்த்தால் கருக்காமல் இருக்கும்).பருப்பு,மிளகாய் வற்றல், உப்பு சேர்த்து தண்ணிர் இல்லாமல் அரைத்தெடுக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, அரைத்துள்ள பருப்பு
கலவையை போட்டு மிதமான தீயில் கிளறவும்.
நன்றாக உதிரியானதும் வேகவைத்துள்ள வாழைப்பூ, தேங்காய துருவல் சேர்த்து மீண்டும் கிளறவும்.
பருப்பு உசிலி, மோர் குழம்பு காம்பினேஷன் sநன்றாக இருக்கும்.
குறிப்பு: சிலபேர் பருப்பு கலவயை இட்லி தட்டில் வைத்து வேகவைத்து உதிர்த்து சேர்ப்பதுண்டு
சிலபேர் துவரம்பருப்ம்,கடலைபருப்பும் சேர்த்து செயுவார்கள்.

13 comments:

மின்மினி RS said...

நல்ல எளிமையான விளக்கம்..அருமை, செய்து பார்த்திடவேண்டியதுதான்.

இந்த வேர்ட் வெரிபிகேஷனை எடுத்துவிடலாமே..

ஸாதிகா said...

எனக்கு ரொம்ப பிடித்த உசிலி

Kanchana Radhakrishnan said...

nice presentation

ராமலக்ஷ்மி said...

அழகாய் விளக்கியுள்ளீர்கள். நன்றி.

நானும் சொல்ல நினைத்தேன்:)! வொர்ட் வெரிஃபிகேஷன் நீக்கினால் நன்றாக இருக்கும்.

சாருஸ்ரீராஜ் said...

ரொம்ப நல்லா இருக்கு விஜி

மனோ சாமிநாதன் said...

வாழைப்பூ உசிலி பார்க்க அழகாயிருக்கிறது, விஜி! குறைவான பொருள்களை வைத்து சுவையாக செய்யக்கூடிய கறி வகை இது!

Asiya Omar said...

விஜி சம்பல் மாதிரி பார்க்கவே அழகு.ட்ரையாகத்தான் இருக்குமா?

Vijiskitchencreations said...

மின்மினி வாங்கோ முதல் வருகைக்கு நன்றி.அடிக்கடி வாங்கோ.எடுத்துட்டேன்.

ஸாதிகா எனக்கும் ரொம்ப பிடிக்கும் ஆனால் வாழைப்பூ உசிலி அவ்வளவா பிடிக்காது, கேப்சிகம், பீன்ஸ்,வெங்காய பருப்பு உசிலி சுப்பர்.

Vijiskitchencreations said...

ராமலஷ்மி முதல் வருகைக்கு நன்றி. உங்க வருகைக்கு நன்றி. எடுத்துட்டேன்.

சாரு எப்படி இருக்கிங்க. நன்றி.

Vijiskitchencreations said...

மனோ அக்கா நன்றி. ஆமாம் சரியா சொன்னிங்க.

ஆசியா வாங்கோ. நான் கொஞமா எண்ணெய் விடுவேன் அதினால் + நான்ஸ்டிக் யூஸ் செய்தால் ட்ரையாக தான் இருக்கும். நன்றி.

Jaleela Kamal said...

எனக்கு பருப்புசிலி ரொம்ப பிடிக்கும், வாழைப்பூவில் அசத்தலாக இருக்கு, விஜி

ஹுஸைனம்மா said...

துவரம் பருப்பு போட்டு செய்வேன்; இது புதுசா இருக்கு.

வேர்ட் வெரிஃபிகேஷன் இன்னும் இருக்கு விஜி. சரி பாருங்க.

Asiya Omar said...

வாழைப்பூ பருப்பு உசிலி அருமை...